K U M U D A M   N E W S

#BREAKING : பேராசிரியர் பணியிடம்; தமிழக அரசுக்கு நீதிமன்றம் கண்டனம்

நிரந்தர இணை பேராசிரியர், உதவி பேராசிரியர்களை நியமிக்க முடியவில்லை என்றால் அரசு சட்டக் கல்லூரிகளை மூடிவிடலாம் என சென்னை உயர்நீதிமன்றம் காட்டம். அரசு சட்டக் கல்லூரிகளில் காலியாக உள்ள இணைப் பேராசிரியர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப கோரி வசந்தகுமார் என்பவர் தொடர்ந்த வழக்கு

“இரவில் நடக்கும் தவறுகளுக்கு நாங்கள் பொறுப்பில்லை” - சட்டத்துறை அமைச்சர் பதில்

இரவில் நடைபெறும் குற்றச்செயல்களுக்கு அரசாங்கத்தை குறைசொல்லக் கூடாது என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

சிறை கைதிகளின் பேச்சு பதிவு செய்யப்படுகிறதா?.. வழக்கறிஞரின் புகாருக்கு அரசு பதில்

புழல் சிறையில் விசாரணைக் கைதிகள் இண்டர்காம் மூலமே  வழக்கறிஞர்களுடன் பேசும் நடைமுறை திரும்பப் பெறப்பட்டுள்ளதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

குற்றவியல் சட்டங்களுக்கு இந்தியில் பெயர்.. மத்திய அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்

மூன்று குற்றவியல் சட்டங்களுக்கு இந்தியில் மட்டும் பெயர் வைத்ததன் மூலம் தமிழர்கள் மீது இந்தி திணிக்கப்பட்டுள்ளது என தமிழ்நாடு புதுச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் மாரப்பன் சார்பில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்நிலையில், மத்திய அரசு இதுதொடர்பாக பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

ரூ.10 கோடி நஷ்ட ஈடு - செல்வப்பெருந்தகை எடுத்த அதிரடி முடிவு!

Selvaperunthagai Press Meet: பகுஜன் சமாஜ் மாநிலச் செயலாளர் ஜெய்சங்கரின் நடவடிக்கையால் தனது புகழுக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதாகக் கூறி தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வபெருந்தகை நஷ்ட ஈடு கேட்டுள்ளார்.

கட்சியே ஆரம்பிக்கலை.. ஆட்சியை பிடிக்க நினைக்குறாங்க.. விஜய்யை தாக்கிய ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்

EVKS Elangovan About TVK Vijay : கட்சியை ஆரம்பிப்பதற்கு முன்னாலேயே ஆட்சியை பிடிப்போம் என சொல்லி வரும் நிலையில், திருமாவளவன் சொல்வதில் தவறில்லை என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.

காவல்நிலையத்தை முற்றுகையிட்ட வழக்கறிஞர்கள் | Kumudam News 24x7

Madurai Lawyers Protest: மதுரை நீதிமன்ற வளாகத்தில் 2 வழக்கறிஞர்களை தாக்கிய உளவுத்துறை போலீசார்மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வழக்கறிஞர்கள் போராட்டம்.

வழக்கை சட்டப்படி சந்திப்போம் - மகாவிஷ்ணுவின் வழக்கறிஞர்

அரசு பள்ளியில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியாதால் கைதான வழக்கை சட்டப்படி சந்திப்போம் என செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார் மகாவிஷ்ணுவின் வழக்கறிஞர் பாலமுருகன்

சென்னையில் இறங்கிய 16,500 போலீசார் - தீவிர பாதுகாப்பு

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி சென்னை முழுவதும் 16, 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் 1,519 விநாயகர் சிலைகள் வைக்க காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது.

வக்பு வாரிய சட்ட திருத்தம் கண்டிப்பாக நிறைவேறும் - எச்.ராஜா திட்டவட்டம்

வக்பு வாரிய சட்ட திருத்தம் கண்டிப்பாக நிறைவேறும் என்று பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.