K U M U D A M   N E W S

government

’உதயநிதி வீடுகள் வழங்கவில்லை’.. பொதுமக்கள் சாலை மறியல்.. சென்னையில் பரபரப்பு!

‘’கண்ணப்பர் திடலில் வசிக்கும் ஒரு பகுதி மக்களுக்கு மட்டுமே வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கு 40 வருடங்களாக வசிக்கும் 200க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு வீடுகள் ஒதுக்கவில்லை’’ என்று ஒருபகுதி மக்கள் குற்றம்சாட்டினார்கள்.

அரசின் திருமண உதவி திட்டத்திற்கு தங்கம் கொள்முதல்

தமிழ்நாடு அரசின் திருமண உதவி திட்டங்களுக்காக ரூ.48.83 கோடி செலவில் 16 கிலோ தங்கத்தை சமூக நலத்துறை கொள்முதல் செய்ய உள்ளது. 8 கிராம் எடையுள்ள 8000 தங்க நாணயங்களை வாங்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

SPB: SP பாலசுப்ரமணியம் பெயரில் தெரு... முதலமைச்சருக்கு SP சரண் வைத்த கோரிக்கை!

சென்னை காம்தார் நகருக்கு, மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் பெயரை சூட்ட வேண்டும் என்று அவரது மகன் சரண், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

மீனவர்கள் 5 பேர் கைது... சிங்களப் படையினர் அட்டகாசம்... மத்திய, மாநில அரசுகளுக்கு ராமதாஸ் கேள்வி!

Fishermen Arrest in Kanyakumari : கன்னியாகுமரியில் இருந்து ஆந்திரா சென்ற மீனவர்களை, இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் மத்திய, மாநில அரசுகளுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

அரசு வேலை வாங்கித்தருவதாக மோசடி.. அதிமுக முன்னாள் அமைச்சர் மீது வழக்குப்பதிவு

அரசு வேலை வாங்கித்தருவாத கூறி ரூ.65 லட்சம் மோசடி செய்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் சுப்பிரமணியன், அவரது மகள் லாவண்யா மீது சேலம் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

LIVE : ராயப்பேட்டை மருத்துவமனையில் ரவுடி சீசிங் ராஜா உடல்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடி சீசிங் ராஜா என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார். ரவுடி சீசிங் ராஜா உடலுக்கு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட உள்ளது

கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி நடத்திய இலவச கருத்தரங்கம்.. ஆலோசனை வழங்கிய EX IAS அதிகாரி

சென்னை அண்ணா நகரில் கிங்மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ் அகாடமி சார்பில், குரூப் தேர்வு எழுதவுள்ள தேர்வாளர்கள் கலந்து கொண்ட இலவச கருத்தரங்கம் நடைபெற்றது.

கிண்டியில் 118 ஏக்கரில் பூங்கா, பசுமைவெளி!

சென்னை கிண்டியில் ஏக்கர் பரப்பளவில் மக்கள் பயன்பாட்டிற்காக பூங்கா, பசுமைவெளி உருவாக்க தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

Bus Driver Attack : வழிவிடாமல் சென்ற தனியார் பேருந்து.. முந்தி சென்று தாக்கிய அரசு பேருந்து ஓட்டுநர்

Bus Driver Attack in Dharmapuri : தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் பகுதியில் தனியார் ஆம்னி பேருந்தும், அரசு பேருந்தும் முந்தி சென்ற விவகாரத்தில் அரசு பேருந்து ஓட்டுநர் ஆம்ணி பேருந்து ஓட்டுநரை கடுமையாக தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

TNPSC : அரசு பணியாளர் தேர்வு மதிப்பீட்டில் மாற்றம்... மென்பொருள் மூலம் விடைத்தாள்களை மதிப்பீடு செய்ய முடிவு!

TNPSC Exam New Update : டிஎன்பிஎஸ்சி தேர்வு மதிப்பீட்டில் மென்பொருள் மூலம் கணினி வழி மதிப்பீட்டு முறையை கொண்டு வர அரசு பணியாளர் தேர்வாணையம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.