K U M U D A M   N E W S
Advertisement

Chennai

விநாயகர் சதுர்த்தி விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் மக்கள்.. GST சாலையில் போக்குவரத்து நெரிசல்

விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்காக சொந்த ஊர் சென்று குடும்பம் குடும்பமாக சென்னை திரும்பும் மக்கள். தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் - எறும்பு போல் ஊர்ந்து செல்லும் வாகனங்கள்

JUSTIN | பரனூர் சுங்கசாவடியில் போக்குவரத்து நெரிசல்

விநாயகர் சதுர்த்தி, வார இறுதி நாள் விடுமுறை முடிந்த நிலையில் பொதுமக்கள் சென்னை திரும்புகின்றனர். ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்னை நோக்கி வருவதால் கடும் போக்குவரத்து நெரிசல்

அடுத்த 6 நாட்கள் மழை கொட்டப்போகுது.. குடையை எடுத்து ரெடியா வைங்க மக்களே!

தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.

பள்ளியில் சர்ச்சை பேச்சு.! கைதான மகாவிஷ்ணு - அன்பில் மகேஷ் விளக்கம்

மகாவிஷ்ணு கைது கைது செய்யப்பட்டது தொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஷிடன் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், மாற்றுத்திறனாளிகளை அவமானப்படுத்தியதாக மகாவிஷ்ணு மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த விவகாரம் இப்போது காவல்துறை வ்சம் சென்றுள்ளது என தெரிவித்துள்ளார்.

சர்ச்சை பேச்சில் சிக்கிய மகா விஷ்ணு விமான நிலையத்தில் கைது.. ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு

அரசு பள்ளியில் மறுபிறவி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியது தொடர்பாக ஆன்மிக சொற்பொழிவாளர் மகாவிஷ்ணுவை சென்னை விமான நிலையத்தில் கைது செய்து போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் மகாவிஷ்ணுவை போலீசார் கைது செய்ததற்கு அவரது ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்

அரசு பள்ளிகளில் சர்ச்சை பேச்சு.. சென்னை விமான நிலையத்தில் மகா விஷ்ணு கைது

அரசு பள்ளியில் மறுபிறவி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியது தொடர்பாக ஆன்மிக சொற்பொழிவாளர் மகாவிஷ்ணுவை சென்னை விமான நிலையத்தில் போலீசாரால் கைது செய்தனர்.

அரசு பள்ளியில் சர்ச்சை பேச்சு - மகாவிஷ்ணு கைது?

அரசுப்பள்ளிகளில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்த மகாவிஷ்ணுவை சென்னை விமான நிலையத்தில் வைத்து போலீசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மகாவிஷ்ணுவிடம் போலீசார் விசாரணை?

அரசுப்பள்ளிகளில் ஆன்மிக சொற்பொழிவு நடத்தி சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்த மகாவிஷ்ணுவிடம் போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

மகா விஷ்ணு அதிரடி கைது.. விமான நிலையத்தில் தட்டித்தூக்கிய போலீஸ்.. என்ன நடந்தது?

இந்த சம்பவம் குறித்து ஆஸ்திரேலியாவில் இருந்து வீடியோ வெளியிட்ட மகா விஷ்ணு, ''நான் பேசியதில் என்ன தவறு உள்ளது? நான் எங்கும் ஓடி ஒளியவில்லை. நாளையே சென்னை வந்து இது குறித்து போலீசிடம் விளக்கம் அளிக்க உள்ளேன்'' என்று விளக்கம் அளித்தார்.

Dr. MGR Janaki College : எம்ஜிஆர் ஜானகி கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்

Bomb Threat To Dr. MGR Janaki College in Chennai : சென்னையில் உள்ள எம்ஜிஆர் ஜானகி கலை, அறிவியல் கல்லூரிக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் இந்த மிரட்டலானது புரளி என தெரிய வந்தது.