K U M U D A M   N E W S

தமிழ்நாட்டின் 12 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை... என்ன காரணம்?... பரபரப்பு தகவல்!

தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவு அளித்தவர்களின் வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். சென்னை, கும்பகோணம், தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட 12 இடங்களில் இந்த சோதனை நடந்து வருகிறது.

சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்து.. 4 பேர் மரணம்.. பலர் படுகாயம்.. முதல்வர் நிவாரணம்

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள பந்துவார்பட்டி கிராமத்தில் செயல்படும் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் நிவாரணம் இரங்கல் தெரிவித்துள்ள நிலையில்,தலா 3 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார்.

லடாக்கில் ஆற்றைக் கடந்த 5 ராணுவ வீரர்கள் உயிரிழந்த சோகம்.. தலைவர்கள் இரங்கல்

லடாக்கில் ராணுவ வீரர்கள் பயிற்சி வாகனம் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் பறிமுதல் செய்யப்பட்ட கள்ளச்சாராயம்..4 ஆண்டுகளில் எவ்வளவு? அதிர்ச்சி ரிப்போர்ட்

கடந்த 2021 ஆண்டு ஜூன் முதல் டிசம்பர் வரை கள்ளச்சாராயம் தொடர்பாக 96,916 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 96737 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 4 ஆண்டுகளில் 4,63,710 வழக்குகளை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் பதிவு செய்துள்ளனர் என்ற அதிர்ச்சி புள்ளி விவரங்கள் குமுதம் செய்திகளுக்கு கிடைத்துள்ளது.

சட்டசபையில் அமளி.. ஸ்டாலின் பதவி விலக முழக்கமிட்ட அதிமுக எம்எல்ஏக்கள்..கூண்டோடு வெளியேற்றம்.. சஸ்பெண்ட்

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்களுக்கு பொறுப்பேற்று முதல்வர் ஸ்டாலின் பதவி விலகக் கோரி சட்டசபையில் முழக்கமிட்ட அதிமுக எம்எல்ஏக்கள் அவைக்காவலர்களால் வெளியேற்றப்பட்டனர். இன்று ஒருநாள் அவை நடவடிக்கைகளில் அதிமுக எம்எல்ஏக்கள் பங்கேற்க தடை விதித்து சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டுள்ளார்.

சட்டசபையில் கலவரம் நடத்த அதிமுக திட்டம்.. முதல்வர் ஸ்டாலின் பகீர் புகார்

சட்டசபையில் திட்டமிட்டு கலவரத்தை ஏற்படுத்த அதிமுக உறுப்பினர்கள் முயற்சி செய்கிறார்கள் என முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.