K U M U D A M   N E W S

AIADMK

"அவர்களுக்கு தகுதி இல்லை..!" - திமுகவை கடுமையாக சாடிய ஜெயக்குமார்

திமுகவுக்கு அண்ணாவின் பிறந்தநாள் விழாவை கொண்டாட தகுதியே இல்லை - திமுகவை கடுமையாக சாடிய ஜெயக்குமார்

#JUSTNOW | அண்ணா உருவப்படத்திற்கு இபிஎஸ் மரியாதை

பேரறிஞர் அண்ணாவின் 116-வது பிறந்தநாளையொட்டி சென்னை அண்ணாசாலையில் உள்ள அவரது உருவப்படத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் மரியாதை செலுத்தினார்

பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

தமிழ்நாடு முழுவதும் கட்சி பாகுபடின்றி அண்ணாவின் பிறந்தநாளை திமுக, அதிமுக தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர். திமுக சார்பில் மாநிலம் முழுவதும் பொது இடங்களில் அண்ணாவின் உருவப்படங்கள் வைக்கப்பட்டுள்ளன. அண்ணாவின் புகழை பரப்பும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

”அதெல்லாம் முதல்வரின் முடிவு.. எங்களது பணியல்ல” - திருமா குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர்

”அதெல்லாம் முதல்வரின் முடிவு.. எங்களது பணியல்ல” - திருமா குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் சேகர்பாபு

'அந்த வீடியோவை அட்மின் போட்டிருப்பார்; எனக்கு தெரியாது’.. திருமாவளவன் விளக்கம்!

''ஆட்சியிலும் பங்கு ,அதிகாரத்திலும் பங்கு. கடைசி மக்களுக்கு ஜனநாயகம். எளிய மக்களுக்கு அதிகாரம் இதையெல்லாம் சொல்கின்ற கூட்டணி ஆட்சி என்ற குரலை உயர்த்திய இயக்கம் விடுதலை சிறுத்தைகள் கட்சி’’ என்று திருமாவளவன் கூறியிருந்தார்.

‘ஆட்சியிலும் பங்கு; அதிகாரத்திலும் பங்கு’.. மீண்டும் பரபரப்பை பற்ற வைத்த திருமாவளவன்.. அதிரடி வீடியோ!

Thirumavalavan Old Video Controversy : திமுக கூட்டணியில் மிகவும் நம்பிக்கைக்குரிய கூட்டாளியாக வலம் வருவது தொல்.திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் கட்சி. வெறும் கூட்டணி என்பதை தாண்டி கொள்கைரீதியாகவும் திமுக-விசிக இடையே வலுவான பிணைப்பு உள்ளது. ஆனால் கடந்த சில நாட்களாக நடக்கும் சம்பவங்கள் திமுகவிடம் இருந்து விசிக பிரிகிறதா? என்ற கேள்வியை அனைவரது மனதிலும் எழுப்பியுள்ளது.

’பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு’.. திமுக அரசுக்கு எதிராக மாபெரும் போராட்டம்.. எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!

''ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து, தமிழகத்தில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை அதிகரித்து வருவதை அனைவரும் அறிவோம்'' என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

ஸ்டாலின் உதவாக்கரை என்று சொல்லிவிடுங்கள்... திமுக செய்யும் ஹிட்லர் ஆட்சி.. ஆர்.பி. உதயகுமார் ஆவேசம்!

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அனைத்து மாவட்டத்திற்கும் சென்று வளர்ச்சி கூட்டத்தில் கதாநாயகன் போல் ஆய்வு செய்ய யார் உரிமை கொடுத்தது என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆவேசமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.

கே.பி.முனுசாமி திடீர் சாலை மறியல்; கிருஷ்ணகிரியில் பரபரப்பு

கிருஷ்ணகிரியில் ரூ.15 கோடி மதிப்பில் புதிய சாலை பணிகளை தொடங்கி வைக்க திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்ததால் அதிமுகவின் கே.பி.முனுசாமி சாலை மறியலில் ஈடுபட்டார்.

விசிக மதுவிலக்கு மாநாடு: 'எந்த அரசியலும் இல்லை’.. அமைச்சர் மனோதங்கராஜ் பேட்டி!

விசிக மதுவிலக்கு மாநாடு நடத்துவதில் எந்த அரசியலும் இல்லை என அமைச்சர் மனோதங்கராஜ் தெரிவித்துள்ளார்.