K U M U D A M   N E W S
Promotional Banner

வரதட்சணை புகார்.. மாமியார் வீட்டு முன்பு டீ கடை போட்டு நூதன போராட்டம்

ராஜஸ்தானைச் சேர்ந்த கிருஷ்ண குமார் தாக்கத் என்பவர், தன் மீது சுமத்தப்பட்ட வரதட்சணை கொடுமை புகார் மீதான எதிர்ப்பை பதிவு செய்யும் வகையில், '498A கஃபே' என்ற பெயரில் ஒரு தேநீர் கடையை திறந்துள்ளார். கைவிலங்கு அணிந்துக் கொண்டு வாடிக்கையாளருக்கு தேநீர் வழங்குவதால் இந்தியா முழுவதும் இவரது நூதன போராட்டம் பேசுப்பொருளாகியுள்ளது.