K U M U D A M   N E W S

வானிலை

Weather Update: இந்தியாவில் கொட்டித் தீர்க்கும் கனமழை.. எந்தெந்த மாநிலங்களில் ரெட் அலர்ட்?.. முழு விவரம்!

கர்நாடகாவின் கடலோர பகுதிகளில் ஆகஸ்ட் 6ம் தேதி வரை அதீத கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் ஆகஸ்ட் 7ம் தேதி வரை கனமழை தொடரும் என்றும் தமிழ்நாட்டின் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியை ஒட்டியுள்ள மாவட்டங்களில் ஆகஸ்ட் 5ம் தேதி (நாளை) வரை கனமழை நீடிக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Chennai Rain Update : சென்னை மக்களே உஷார்.... வெளிய போகும்போது குடையை மறந்துடாதீங்க!

Chennai Rain Update : அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நிலச்சரிவு: 1 வாரத்துக்கு முன்பே எச்சரிக்கை விடுத்தும் கேரளா என்ன செய்தது? அமித்ஷா கேள்வி!

Home Minister Amit Shah About Wayanad Landslides : ''கேரளாவில் பேரிடர் ஏற்படும் என்று 1 வாரத்துக்கு முன்பே மத்திய அரசு எச்சரிக்கை விடுத்தும் கேரள அரசு என்ன செய்து கொண்டிருந்தது? மேலும் 9 குழுக்கள் அடங்கிய தேசிய பேரிடர் மீட்பு படையினர் கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இயற்கை பேரிடர் தொடர்பாக மத்திய அரசு விடுக்கும் முன் எச்சரிக்கையை மாநில அரசு தயவு செய்து படித்து பார்க்க வேண்டும்'' என்று அமித்ஷா கூறியுள்ளார்.

Wayanad Landslide: தமிழகத்தில் நிலச்சரிவு அபாய இடங்கள் என்னென்ன?.. பிரதீப் ஜான் வார்னிங்!

Pradeep John on Landslide in Tamil Nadu : வயநாட்டில் நிலச்சரிவுக்கு காரணம் அதிக மழைப்பொழிவுதான் என்று தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் கூறியுள்ளார். நிலச்சரிவு ஏற்படும் இடங்களை நாம் முன்கூட்டியே கண்டறிய முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

காலையிலேயே ஹேப்பி நியூஸ்.. தமிழகத்தில் 7 நாள் கொட்டப்போகும் மழை..சென்னையில் எப்படி?

இன்று முதல் ஜூலை 24 வரை மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

Chennai Rain: பகலில் வாட்டி வதைத்த வெயில்... இரவில் வெளுத்து வாங்கிய மழை... சில்லுன்னு மாறிய சென்னை!

Chennai Rain Update : சென்னையில் நேற்று காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகமிருந்த நிலையில், இரவு முழுவதும் கனமழை கொட்டித் தீர்த்தது. அதிகபட்சமாக மாமல்லபுரத்தில் 72 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

சட்டென மாறிய வானிலை.. தமிழ்நாட்டின் பல இடங்களில் கொட்டும் மழை... சென்னையில் வெப்பம் தணிந்தது!

சென்னை புறநகர் பகுதிகளான செங்குன்றம், ஆவடி பகுதிகளிலும் மழை கொட்டியது. இதேபோல் திருவள்ளூர், காஞ்சிபுரம், சிவகங்கை,புதுக்கோட்டை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது.

காலையிலேயே சென்னைவாசிகளுக்கு 'ஜில்' நியூஸ்... இன்றும், நாளையும் கொட்டப்போகுது மழை!

10ம் தேதி முதல் 12ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

வெளுத்து வாங்கப் போகும் மழை... 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்

சென்னை, திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை மற்றும் சிவகங்கை ஆகிய 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு... தமிழகத்தில் எங்கெல்லாம் மழை… மீனவர்களுக்கு என்ன எச்சரிக்கை..?

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகம், புதுவையில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் மன்னார் வளைகுடா, அதனை ஒட்டிய தென்தமிழக கடலோரப் பகுதிகளில் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என மீனவர்களுக்கும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.