வடகிழக்கு பருவமழை... வானிலை ஆய்வாளர் வெங்கடேஷ் கொடுத்த பகீர் தகவல்!
இந்த ஆண்டு வரும் நாட்களில், தமிழ்நாட்டில் டெல்டா மாவட்டங்களில் அதிகப்படியான மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வாளர் வெங்கடேஷ் தகவல் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு வரும் நாட்களில், தமிழ்நாட்டில் டெல்டா மாவட்டங்களில் அதிகப்படியான மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வாளர் வெங்கடேஷ் தகவல் தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு பருவமழையின் காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக மதுரையின் பல பகுதிகளில் தொடர் மழை பெய்தது. இதன்காரணமாக மதுரையின் செல்லூர் உள்ளிட்ட பகுதியில் மழை நீர் தேங்கியிருப்பது தொடர்பாக குமுதம் செய்திகளில் செய்தி வெளியானது. இதையடுத்து அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து மழைநீரை வெளியேற்றினர்.
மார்ச் மாதத்திற்குள் சாலை பணிகள் முடிந்து நகரில் போக்குவரத்து நெரிசல் குறையும் எனவும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது எனவும் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
திமுக அரசிடம் தொலைநோக்குப் பார்வை இல்லை என்றும் செய்யாத பணிகளை செய்து முடித்ததுபோல் மார்கெட்டிங் மட்டும்தான் நடக்கிறது என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
சென்னையில் மழைக்கால நோய் தடுப்பு நடவடிக்கையாக 213 இடங்களில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மருத்துவ முகாம்களுக்கு சென்று சிகிச்சை எடுத்துக்கொள்ள மாநில சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை விலகிய நிலையில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை தொடர்பாக வட சென்னை பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை மற்றும் 12 காவல் மாவட்டத்தில் பேரிடர் மீட்பு குழுக்கள் அமைக்கப்பட்டு தயார் நிலையில் இருப்பதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அமைச்சர்கள் மற்றும் அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
அக்டோபர் 16, 17ம் தேதிகளில் சென்னையில் கனமழை பெய்தாலும் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.