#JUSTIN: மனோவின் மகன்கள் மீது தாக்குதல் - 2 பேர் கைது
திரைப்பட பின்னணி பாடகர் மனோவின் மகன்களை தாக்கிய வழக்கில் 2 பேர் கைது
திரைப்பட பின்னணி பாடகர் மனோவின் மகன்களை தாக்கிய வழக்கில் 2 பேர் கைது
இரு தரப்பினர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் இருவரை தாக்கியதாக பாடகர் மனோவின் மகன்கள் ஜாகிர், ரபீக் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் இருவரும் 30 நாட்கள் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டுமென நிபந்தனையுடன் சென்னை உயர்நீதிமன்றம் முன்ஜாமின் வழங்கியுள்ளது.
பாடகர் மனோவின் மகன்கள் மதுபோதையில் இளைஞர், சிறுவனை தாக்கியதாக எழுந்த புகார் - புதிய சிசிடிவி வெளியீடு.. "தாக்குதல் நடத்தியவர்கள் சிறு வயது என்பதால் அவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகும் என நினைத்து புகாரளிக்கவில்லை" என பாடகர் மனோ மனைவி கோரிக்கை
மனோ மகன்கள் மீது இருசக்கர வாகனங்களில் வந்த மர்ம கும்பம் கண்மூடித்தனமாக தாக்கும் காட்சிகள் வெளியானது. புதிய சிசிடிவி காட்சி மூலம், மனோவின் மகன்கள் கொடூர தாக்குதலுக்கு ஆளானது அம்பலம்.
கல்லூரி மாணவர் மற்றும் சிறுவனை, மனோவின் மகன்கள் தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், தற்போது புதிய திருப்பமாக வெளியாகியிருக்கும் சிசிடிவி காட்சிகள் வழக்கில் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளன.
கல்லூரி மாணவர் மற்றும் சிறுவன் மீது தாக்குதல் நடத்திய விவகாரத்தில் மனோவின் மகன்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. இதுதொடர்பான FIR வெளியானது