K U M U D A M   N E W S

தற்கொலை

"மனைவியோடு சேர்த்து வைங்க.. இல்ல பிரிச்சு வைங்க"... செல்போன் டவரில் இளைஞர் அலப்பறை

விளாத்திகுளத்தில் 130 அடி செல்போன் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த இளைஞரை, காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு துறை அதிகாரிகள் 2 மணி நேர பேச்சுவார்த்தைக்குப் பின் பத்திரமாக மீட்டனர்.

ஆபாசமாக திட்டிய காதலன்... விபரீத முடிவெடுத்த காதலி...அதிரடி உத்தரவிட்ட நீதிமன்றம்

காதலன் திட்டியதால் மனமுடைந்து காதலி தற்கொலை செய்த வழக்கில் காதலனுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை

காரில் 5 சடலம்.. கிடைத்த கடிதம்.. வெளியான புதிய தகவல்

புதுக்கோட்டை மாவட்டம் நமணசமுத்திரம் அருகே தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேரும் தற்கொலை செய்து கொண்டனர். இந்தநிலையில் அவர்கள் எழுதி வைத்திருந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அதில், தங்களுடைய உடல்களை உறவினர்களிடம் ஒப்படைக்க வேண்டாம் என எழுதி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

காரில் இருந்த 5 சடலங்கள்.. வெளியான பகீர் தகவல்

புதுக்கோட்டை நமணசமுத்திரம் அருகே காரில் இருந்து 5 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேரும் தற்கொலை செய்துகொண்டதாக முதற்கட்ட தகவல் கிடைத்துள்ளது.

தாய் கையால் குழந்தைகளுக்கு விஷம்... தென்காசியில் நடந்த பயங்கரம்..

தென்காசி ஆழ்வார்குறிச்சி அருகே அரளி விதையை சாப்பிட்டு 3 குழந்தைகளுடன் தாய் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். அதில் ஒரு சிறுவன் பலியான நிலையில் தாய் மற்றும் 2 சிறுவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

#JUSTIN : சிறையில் உயிரை மாய்த்துக்கொள்ள முயன்ற கைதி

சென்னை அடுத்த பூந்தமல்லி கிளைச் சிறையில் எறும்பு மருந்து குடித்து ஷாகிர் என்ற கைதி தற்கொலை முயற்சி. சுய நினைவை இழந்த ஷாகிரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்த சிறைக் காவலர்கள்

ஸ்விக்கி டெலிவரி பாய் தற்கொலை - 'அந்த' வார்த்தைதான் காரணமா?

Swiggy Delivery Boy Death : சென்னை கொரட்டூரில் உணவு டெலிவரி செய்து வந்த கல்லூரி மாணவர் உயிரை மாய்த்து கொண்ட நிலையில் அவர் எழுதி வைத்த கடிதத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உயிரை மாய்த்துக்கொள்ள முயன்ற மனைவி.. ஆத்திரத்தில் பெண் வீட்டார் செய்த செயல்

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை முயற்சி. தற்கொலைக்கு முயன்ற பெண், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதி

மருத்துவக் கல்லூரி மாணவி விபரீத முடிவு... 5வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை... காரணம் என்ன?

காஞ்சிபுரம் மருத்துவக் கல்லூரியில் மாணவி ஒருவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Atal Setu Bridge Viral Video : பாலத்தில் இருந்து குதிக்க முயன்ற பெண்... துணிச்சலாக காப்பாற்றிய கார் டிரைவர்... வைரலாகும் வீடியோ!

Atal Setu Bridge Viral Video : மும்பையில் அடல் சேது பாலத்தின் மேல் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண்ணின் காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.