K U M U D A M   N E W S

தமிழ்நாடு அரசு

'இந்திய அரசியலின் ஆளுமை'.. கலைஞர் கருணாநிதிக்கு புகழாரம் சூட்டிய பிரதமர் மோடி!

''தமிழ்நாட்டின் வளர்ச்சி, முன்னேற்றத்தில் கருணாநிதி எப்போதும் ஆர்வம் கொண்டிருந்தார். தமிழ்நாட்டு மக்களால் பலமுறை தேந்தெடுக்கப்பட்ட கருணாநிதி ஒரு அரசியல் தலைவராக, முதலமைச்சராக இந்திய வரலாற்றில் தனக்கென தனி முத்திரையை பதித்துள்ளார்'' என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

18,000 பெண் ஊழியர்கள் தங்கும் பிரம்மாண்ட விடுதி.. முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!

முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்த பெண் பணியாளர்கள் தங்கும் விடுதி ரூ.706.50 கோடி செலவில் 20 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. 13 தொகுதிகளாக, 10 மாடிகள் கொண்டதாக கட்டப்பட்டுள்ள இந்த பிரம்மாண்ட விடுதியில் 18,720 பெண்கள் தங்கிக் கொள்ளலாம்.

Free Electricity: இலவச மின் இணைப்புகளை கணக்கெடுக்க தமிழ்நாடு அரசு உத்தரவு.. என்ன காரணம்?

ஒவ்வொரு மாவட்டத்திலும் கிராமம் வாரிய விவசாய பயன்பாட்டில் அல்லாத இலவச மின் இணைப்புகளை கணக்கெடுக்க வேளாண்மைத் துறை கள ஆய்வு அதிகாரிகளுக்கு வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை உத்தரவிட்டுள்ளது.

Engineering College Fees : சிறப்பு இடஒதுக்கீடு மாணவர்களிடம் கட்டணம் வசூல்... பொறியியல் கல்லூரிகளுக்கு அரசு உத்தரவு

Special Reservation Students Engineering College Fees : பொறியியல் கலந்தாய்வில் அரசு வழங்கும் சிறப்பு இட ஒதுக்கீடு, கட்டண சலுகையின் கீழ் சேரும் மாணவர்களிடம், பொறியியல் கல்லூரிகள் எவ்வித கட்டணமும் வசூலிக்கக் கூடாது என உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

SIPCOT Workers Hostel : சிப்காட் தொழிலாளர்களுக்காக தங்கும் விடுதி... இன்று திறந்து வைக்கிறார் முதல்வர்!

Chief Minister Stalin Inaugurates SIPCOT Workers Hostel in Tamil Nadu : தமிழ்நாடு அரசு சார்பில் சிப்காட் தொழிலாளர்களுக்காக நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள தங்கும் விடுதிகளை முதலமைச்சர் ஸ்டாலின் காணொளி வாயிலாக இன்று (ஆகஸ்ட் 17) திறந்து வைக்கிறார்.

Athikadavu Avinashi Project : அத்திக்கடவு- அவினாசி திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர்.. பெருமகிழ்ச்சியில் விவசாயிகள்!

Chief Minister Stalin Inaugurates Athikadavu Avinashi Project : அத்திக்கடவு- அவினாசி திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று (ஆகஸ்ட் 17) காணொளி காட்சி வாயிலாகத் தொடங்கி வைத்தார்.

பருவமழை ஆய்வுக்கூட்டம்: அதிகாரிகளிடம் சரமாரியாக கேள்வி கேட்ட உதயநிதி ஸ்டாலின்!

7 மாதமாக ஒரு இடத்திலும் பணிகள் நடைபெறவில்லை என்று அதிகாரிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதுவரை பெறப்பட்ட புகார்கள், அதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பட்டியல் தயார் செய்து வழங்க அதிகாரிகளை அமைச்சர்கள் அறிவுறுத்தினார்கள்.

Monkey Pox Guidelines : அச்சுறுத்தும் குரங்கு அம்மை; வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட தமிழ்நாடு சுகாதாரத் துறை

Tamil Nadu Health Department Issued Monkey Pox Guidelines : குரங்கு அம்மை நோயிலிருந்து தற்காத்துக் கொள்ள செய்ய வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.

Tea Party 2024 : தேநீர் விருந்து: சிரித்தபடி பேசிய மு.க.ஸ்டாலின்-ஆர்.என்.ரவி.. பங்கேற்றவர்கள் யார்? யார்?

CM Stalin Participate Governor RN Ravi Tea Party 2024 : ஆளுநர் மாளிகையில் இன்று மாலை நடந்த தேநீர் விருந்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். தேநீர் விருந்தில் பங்கேற்க சென்ற முதல்வர் ஸ்டாலினை ஆளுநர் ஆர்.என்.ரவியும், அவரது மனைவியும் புன்னகை ததும்ப வரவேற்றனர். பின்பு அங்கு அமைக்கப்பட்டு இருந்த மேடையில் நமது சுதந்திர போராட்டத்தை நினைவுகூறும் வகையில் கலைநிகழ்ச்சிகள் நடந்தன.

Independence Day 2024 : ஆளுநர் தேநீர் விருந்தில் பங்கேற்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

Governor RN Ravi Tea Party on Independence Day 2024 : ஆளுநரின் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்தில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள பாமக, தமாகா மற்றும் அமமுக ஆகிய கட்சிகள் பங்கேற்க உள்ளன. இதேபோல் அதிமுகவும் ஆளுநரின் தேநீர் விருந்தில் பங்கேற்க உள்ளதாக அறிவித்துள்ளது.