K U M U D A M   N E W S

தமிழக அரசு

புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் ரூ.426.32 கோடியில் கட்டப்பட்டுள்ள 3,268 அடுக்குமாடி குடியிருப்புகளை கானொளி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

தமிழகமே திரும்பி பார்க்க இபிஎஸ் சொன்ன வார்த்தை...

அரசுக் கல்லூரிகளில் கௌரவ உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு நிரந்தரமாக ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

தொகுதிப் பார்வையாளர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அட்வைஸ்.... எப்போதும் உழைக்க வேண்டும்!

தலைவர் கலைஞர் தனக்குப் பிடித்த ஊரின் பெயராக, தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் ‘எப்போதும் வென்றான்’ ஊரைச் சொல்வார். எப்போதும் வென்றானாக நாம் பெயர் பெற வேண்டும் என்றால், எப்போதும் உழைக்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

"வருத்தமா இருக்கு.." காரணத்தோடு புது புயலை கிளப்பிய இபிஎஸ்

தமிழ்நாடு போதைப்பொருட்கள் கடத்தலின் கேந்திரமாக விளங்குவது வருத்தமளிக்கிறது. காவல்துறைக்கு முழு சுதந்திரம் வழங்கி போதையில்லா தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

திமுக ஆட்சியில் 2226 கோயில்களில் குடமுழுக்கு.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 31 ஜோடிகளுக்கு இன்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருமணம் நடத்தி வைத்தார்.

கோவை மக்களுக்கு குட் நியூஸ்..!! ரூ.90 லட்சத்தில் அமைகிறது ஆராய்ச்சி பூங்கா

கோவையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் ரூ.90 லட்சத்தில் ஆராய்ச்சி பூங்கா அமைக்க டெண்டர் கோரியது தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகம்

தீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறை

அரசு ஊழியர்கள், பொதுமக்கள் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தீபாவளிக்கு அடுத்த நாளான நவம்பர் 1ம் தேதி அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.   

"குறைந்தபட்ச ஊதியம் வேண்டும்.." ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்

நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழக அரசு நிர்ணயித்த குறைந்த பட்ச ஊதியம் ரூ.665ஐ வழங்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காலநிலை மாற்ற விழிப்புணர்வுக்கு நிதி ஒதுக்கீடு

காலநிலை மாற்ற வீராங்கனைகள் திட்டத்தை செயல்படுத்த ரூ.3.87 கோடி ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.  100 மின்சார ஆட்டோ வாங்க ரூ.3.77 கோடியும், விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கு ரூ.10.80 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளது

ஆம்னி பேருந்துகளுக்கு வரி கிடையாது.. நீதிமன்றம் அதிரடி அறிவிப்பு

கொரோனா ஊரடங்கின்போது இயக்கப்படாத ஆம்னி பேருந்துகளுக்கு சாலை வரி வசூலிக்கமுடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.