K U M U D A M   N E W S
Kumudam Ad

'ஆம்ஸ்ட்ராங் கொலையில் செல்வபெருந்தகைக்கு தொடர்பு'.. பகுஜன் சமாஜ் பரபரப்பு குற்றச்சாட்டு!

''காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணியில் திமுக அங்கம் வகிப்பதால், செல்வபெருந்தகையை கைது செய்வதில் ஆளும் கட்சியான திமுகவும், காவல் துறையினரும் தயக்கம் காட்டி வருகின்றனர். ஆகவே செல்வபெருந்தகையை காங்கிரசில் இருந்து நீக்க வேண்டும்'' என்று கடிதத்தில் கூறப்படுள்ளது.

BiggBoss: பிக் பாஸ் வீட்டில் என்ட்ரியாகும் ‘கவுண்டம்பாளையம்’ ரஞ்சித்..? பஞ்சாயத்து கன்ஃபார்ம்!

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கவுள்ளது உறுதியாகிவிட்டது. இந்த சீசனில் பங்கேற்கும் போட்டியாளர்கள் யார் என்பது குறித்து இதுவரை அறிவிப்புகள் வெளியாகவில்லை. இந்நிலையில், சர்ச்சைக்கு பெயர் போன நடிகர் ரஞ்சித் பிக் பாஸ் வீட்டில் என்ட்ரியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தாய் கையால் குழந்தைகளுக்கு விஷம்... தென்காசியில் நடந்த பயங்கரம்..

தென்காசி ஆழ்வார்குறிச்சி அருகே அரளி விதையை சாப்பிட்டு 3 குழந்தைகளுடன் தாய் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். அதில் ஒரு சிறுவன் பலியான நிலையில் தாய் மற்றும் 2 சிறுவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

AR Murugadoss : பாலிவுட்டில் ரீ-என்ட்ரி... AR முருகதாஸ் சம்பளம் இத்தனை கோடியா... Ok சொன்ன சல்மான்கான்

Director AR Murugandoss Salary For Sikandar Movie : சிவகார்த்திகேயனின் எஸ்கே 23, சல்மான் கான் நடிப்பில் சிக்கந்தர் ஆகிய படங்களை இயக்கி வருகிறார் ஏஆர் முருகதாஸ். இந்த இரண்டு படங்களுக்காகவும் ஏஆர் முருகதாஸ் வாங்கிய சம்பளம் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஹோட்டலில் அதிகாரிகள் அதிரடி சோதனை.. முட்டையில் காத்திருந்த அதிர்ச்சி

திருச்சி துறையூரில் சத்துணவுக்கு வழங்கப்படும் முட்டைகள் ஹோட்டலில் பயன்படுத்தப்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது ஹோட்டலில் தமிழக அரசின் முத்திரையிட்ட சத்துணவு முட்டைகள் விற்கப்படுவது உறுதி செய்யப்பட்டதால் உடனடியாக அந்த கடைக்கு சீல் வைத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். 

விசிக மது ஒழிப்பு மாநாடு: "வேடிக்கையான ஒன்று.." என செல்லூர் ராஜூ விமர்சனம்

மது ஒழிப்பு மாநாட்டை திமுகவை அழைத்து நடத்துவது வேடிக்கையான ஒன்று என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சனம்

லஞ்ச ஒழிப்புத்துறை பிடியில் முன்னாள் அமைச்சர்.. ஊழல் வழக்கில் முதல் தகவல் அறிக்கை

536 கோடி ரூபாய் மாநகராட்சி ஒப்பந்த முறைகேடு தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் 10 சென்னை மாநகராட்சி அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

NLC தொழிலாளர்கள் போராட்டத்தில் தள்ளுமுள்ளு...

நெய்வேலி கியூ பாலத்தில் இருந்து சுரங்க நிர்வாக அலுவலகத்திற்கு பேரணி சென்று தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது போலீசாருக்கும் தொழிலாளர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது 

தேசிய கல்வி கொள்கை வேறு, தேசிய மது விலக்கு கொள்கை வேறு... திருமாவளவன் விளக்கம்!

திமுக-வை உட்கார வைத்து எப்படி மாநாடு ஒழிப்பை பேசுவீர்கள்? நாங்கள் பேசுகிறோமா? இல்லையா? என்பதை மாநாட்டின்போது பாருங்கள் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

அதெப்படி அவர்கள் மதுவை ஒழிப்பார்கள்.. வேடிக்கையாக இருக்கிறது.. - வாசன்

மதுவை ஒழிக்கும் அதிகாரத்தில் இருப்பவர்களை அழைத்து சென்று மது ஒழிப்பு மாநாடு நடத்துவது என்பது, வேடிக்கையாக உள்ளது என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.