K U M U D A M   N E W S

கண்ணீரை வரவைத்த சின்ன வெங்காய விலை! நெல்லையில் கிலோ ரூ.168... அதிர்ச்சியில் பொதுமக்கள்!

தமிழ்நாட்டில் மழை மற்றும் சந்தைக்கு வரும் சின்ன வெங்காயத்தின் வரத்து குறைந்துள்ளதால், அதன் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. குறிப்பாக, நெல்லையில் ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.168-க்கு விற்பனை செய்யப்படுவதால், அன்றாட சமையலுக்காக காய்கறிகள் வாங்கும் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.