K U M U D A M   N E W S

கொல்கத்தா

25 இடங்களில் காயம்.. கழுத்தை நெரித்ததால் மூச்சு திணறல்.. பெண் மருத்துவரின் பிரேத பரிசோதனை அறிக்கையில் அதிர்ச்சி

பாலியல் வன்கொடுமையால் கொலை செய்யப்பட்ட பயிற்சி மருத்துவரின் பிரேத பரிசோதனை அறிக்கையில் 25 இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

பிறப்புறுப்பு உள்பட 14 இடங்களில் காயம்.. மருத்துவ மாணவியின் பிரேத பரிசோதனை ரிப்போர்ட்!

மருத்துவ மாணவியின் மரணம் ஒரு கொலை என்று பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிட்டப்பட்டுள்ளது. உடலில் எலும்பு முறிவு ஏற்பட்டதற்கான அறிகுறி ஏதும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

'இரட்டை வேடம் போடும் மமதா பானர்ஜி'.. மருத்துவ மாணவியின் தந்தை பகீர் குற்றச்சாட்டு!

மருத்துவ மாணவி படுகொலையை கண்டித்து மமதா பானர்ஜி பெண்களுடன் இணைந்து பேரணி மேற்கொண்டார். ஆனால் மறுபக்கம் இந்த விவகாரத்தை கண்டித்து மேற்கு வங்கம் முழுவதும் நடந்து வரும் போராட்டத்தை போலீசார் ஒடுக்குவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மருத்துவ மாணவி படுகொலை: வலுக்கும் போராட்டம்.. மாநிலங்களுக்கு மத்திய அரசு முக்கிய உத்தரவு!

மருத்துவ மாணவி படுகொலை தொடர்பாக ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் சந்தீப் குமார் கோஷிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து 3வது நாளாக விசாரணைக்கு ஆஜரான அவரிடம் மருத்துவ மாணவி மரணம் எப்போது தெரியவந்தது? அதன்பின்பு என்னென்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? என்பது குறித்து துருவித் துருவி விசாரணை நடத்தப்பட்டது.

“இளம் பெண் மருத்துவருக்கு நடந்த சம்பவம் திகிலூட்டுகிறது” - வாஷிங்டன் சுந்தர்

கொல்கத்தாவில் பணியில் இருந்த இளம் மருத்துவருக்கு நடந்த சம்பவம் திகிலூட்டுகிறது என்று கிரிக்கெட் வீரர் வாஷிங்டன் சுந்தர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

PMK Anbumani Ramadoss : கொல்கத்தா கொடூரம்... மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

PMK Anbumani Ramadoss Condemns Kolkata Doctor Murder Case : கொல்கத்தாவில் அரங்கேறும் அத்துமீறல்கள் மன்னிக்க முடியாதவை: மருத்துவர்களின் முழு பாதுகாப்பை மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார்.

Nationwide Doctors Strike : மருத்துவ மாணவி கொலை: 24 மணி நேர வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கிய மருத்துவர்கள்!

Nationwide Doctors Strike For Kolkata Medical Student Murder : பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சம்பவத்தை கண்டித்து, இந்திய மருத்துவர்கள் சங்கம் நாடு தழுவிய அளவில் வேலை நிறுத்தப் போராட்டத்தை இன்று (ஆகஸ்ட் 17) தொடங்கியுள்ளது.

மருத்துவ மாணவி கொலை: முதல்வர் ஸ்டாலின், கனிமொழி வாய் திறக்காதது ஏன்?.. குஷ்பு ஆவேசம்!

''மேற்கு வங்க மாணவி பாலியல் வன்கொடுமை குறித்து கனிமொழி ஒரு ட்வீட் கூட போடவில்லை. முதல்வர் ஸ்டாலின் ஒரு வார்த்தை கூட திறக்கவில்லை. ராகுல் காந்தி இதுவரை வாய் திறக்காதது ஏன்? மமதா ஆட்சியில் தவறு நடக்கிறது எனக்கூற ராகுல் காந்தி ஏன் அஞ்சுகிறார்?'' என்று குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார்.

Doctors Protest : மருத்துவ மாணவி கொலை... நாடு தழுவிய அளவில் வேலை நிறுத்தம்... இந்திய மருத்துவர்கள் சங்கம் அறிவிப்பு!

All India Doctors Association Protest Against Kolkata Doctor Rape Murder Case : பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டதை கண்டித்து, இந்திய மருத்துவர்கள் சங்கம் நாடு தழுவிய அளவில் வேலை நிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ளது.

Kolkata Doctor Rape Murder Case : மருத்துவ மாணவி கொலை... மேற்குவங்கத்தில் தீப்பந்தம் ஏந்தி பேரணி... போராட்டக் களத்தில் நுழைந்த கும்பல்

Kolkata Doctor Rape Murder Case : கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து நடைபெற்ற பேரணியில், மர்ம கும்பல் நுழைந்ததால் போராட்டக் களம் வன்முறையாக மாறியது. மருத்துவமனை அறை, காவல்துறை வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.