கனமழை எதிரொலி; சென்னையில் 5 சுரங்கப்பாதைகள் மூடல்
சென்னையில் கனமழை காரணமாக 5 சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளதாக மாநகராட்சி அறிவித்துள்ளது. கனமழையால் தண்ணீர் தேங்கிய நிலையில் சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளது.
சென்னையில் கனமழை காரணமாக 5 சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளதாக மாநகராட்சி அறிவித்துள்ளது. கனமழையால் தண்ணீர் தேங்கிய நிலையில் சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளது.
சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் எங்கேயும் மின் தடை இல்லை என்றும் 13,000 தன்னார்வலர்கள் சுகாதார பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கனமழை எச்சரிக்கை காரணமாக ராமநாதபுரம், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை
பலநூறு கோடிகளைக் கொட்டி கார் பந்தயம் நடத்தும் திமுக அரசிற்கு, அடிப்படை கட்டமைப்புகளை ஏற்படுத்தும் திறன் இல்லையா? என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் காட்டமாக தெரிவித்துள்ளார்.
சென்னையின் புரசைவாக்கம், கிண்டி, அசோக் பில்லர், வடபழனி உள்ளிட்ட பகுதிகளில் மழை வெளுத்து வாங்குகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிக்குள்ளாகினர்.
கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து, உணவுத் தட்டுப்பட்டை களைவதற்காக மண்டல வாரியாக அமைக்கப்பட்டுள்ள உணவுக் கூடங்களின் பட்டியலை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
கனமழையில் காரணமாக சென்னையின் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.
சென்னை மாநகராட்சி சார்பில் மண்டல வாரியாக 77 இடங்களில் உணவுக்கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேவைப்படுபவர்கள் தொடர்பு கொண்டால் அவர்களுக்கு 3 வேளையும் உணவு வழங்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எவ்வளவு பெரிய மழை வந்தாலும் மக்கள் பாதிக்காத வகையில் பணிகள் செய்யப்பட்டுள்ளது - T. M. Anbarasan
வெறும் அறிக்கையை வைத்து கொண்டு பேரிடரை எதிர்கொள்ள முடியாது - RB Udhayakumar Speech