அமெரிக்காவுக்கும் வெனிசுலாவுக்கும் இடையே உலகின் மிகப்பெரிய எண்ணெய் ஒப்பந்தம் எனக் கூறப்படும் முக்கிய உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இந்த ஒப்பந்தத்தின் மூலம் வெனிசுலாவில் உள்ள சுமார் 65 பில்லியன் பீப்பாய் எண்ணெய் இருப்புகளின் மீது அமெரிக்கா கட்டுப்பாட்டைப் பெறும் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்த ஒப்பந்தம் தொடர்பான அறிவிப்பை டிரம்ப் வெள்ளிக்கிழமை சமூக வலைதளப் பதிவு மூலம் வெளியிட்டார். அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ, பாதுகாப்புத்துறை அமைச்சர் பீட் ஹெக்சத் மற்றும் வெனிசுலாவின் இடைக்கால அதிபர் டெல்சி ரோட்ரிகஸ் ஆகியோர் இணைந்து இந்த ஒப்பந்தத்தை பேச்சுவார்த்தை நடத்தி முடித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உலகில் மிகப்பெரிய ஒப்பந்தம்:
தனது சமூக வலைதளப் பதிவில் டிரம்ப், “உலக வரலாற்றிலேயே மிகப்பெரிய எண்ணெய் ஒப்பந்தத்தில் அமெரிக்கா தற்போது வெனிசுலாவுடன் இணைந்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த அறிவிப்பு சர்வதேச அளவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக, உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் இருப்புகளில் ஒன்றைக் கொண்டுள்ள வெனிசுலாவின் எண்ணெய் வளத்தை அமெரிக்கா எவ்வாறு பயன்படுத்தப் போகிறது என்பது முக்கிய கேள்வியாக உருவெடுத்துள்ளது.
மதுரோ கைது செய்யப்பட்டதன் பின்னணி:
அமெரிக்கா மற்றும் வெனிசுலா இடையிலான இந்த புதிய ஒப்பந்தம், வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ அமெரிக்க ராணுவ நடவடிக்கையின் மூலம் பதவியில் இருந்து அகற்றப்பட்டு, அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்லப்பட்டு சுமார் 9 மாதங்களுக்குப் பிறகு வெளியாகியுள்ளது.
மதுரோ மீது போதைப்பொருள் பயங்கரவாதம் மற்றும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான அமெரிக்க கூட்டாட்சி குற்றச்சாட்டுகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரோ அதிகாரத்திலிருந்து அகற்றப்பட்ட பின்னர், வெனிசுலாவின் எண்ணெய் துறையில் மீண்டும் அமெரிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு வாய்ப்பு வழங்குவது குறித்து டிரம்ப் ஏற்கனவே பேசியிருந்தார்.
அமெரிக்காவில் அதிகரிக்கும் பெட்ரோல் விலை:
அமெரிக்காவில் தற்போது பெட்ரோல் விலை உயர்வு டிரம்ப் நிர்வாகத்திற்கு உள்நாட்டு அளவில் அழுத்தத்தை ஏற்படுத்தி வருகிறது.
இதற்கிடையே ஈரான் போர் 6 மாதங்களை கடந்தும் முடிவுக்கு வராமல் நீடித்து வருவதால், உலகளாவிய எரிசக்தி விநியோகம் குறித்த கவலைகளும் அதிகரித்துள்ளன. இதனால் கச்சா எண்ணெய் விநியோகம் மற்றும் விலை நிலவரம் சர்வதேச அரசியலில் முக்கிய விவாதமாகியுள்ளது.
எரிசக்தி தேவையை சமாளிக்க அமெரிக்கா ஏற்கனவே தனது Strategic Petroleum Reserve (SPR) எனப்படும் மூலோபாய எண்ணெய் கையிருப்பிலிருந்து கச்சா எண்ணெயை பயன்படுத்தி வருகிறது.
300 மில்லியன் பீப்பாய்க்கும் கீழே சென்ற அமெரிக்க எண்ணெய் கையிருப்பு:
2026-ம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்ததைவிட அமெரிக்காவின் மூலோபாய எண்ணெய் கையிருப்பு 100 மில்லியன் பீப்பாய்களுக்கும் மேல் குறைந்துள்ளது.
ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் அமெரிக்காவின் எண்ணெய் கையிருப்பு 300 மில்லியன் பீப்பாய்களுக்கும் கீழே சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மிகப்பெரிய எண்ணெய் வளத்தை கொண்டுள்ள வெனிசுலாவுடன் புதிய ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
எண்ணெய் வளம் கொண்ட வெனிசுலா!
உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் இருப்பைக் கொண்ட நாடுகளில் வெனிசுலாவும் ஒன்று. அந்நாட்டில் சுமார் 303 பில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெய் இருப்பு இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இது உலகின் மொத்த எண்ணெய் இருப்பில் சுமார் 17 சதவீதம் என அமெரிக்க எரிசக்தி தகவல் நிர்வாகமான EIA தெரிவித்துள்ளது.
வெனிசுலாவின் பெரும்பாலான எண்ணெய் வளங்கள் ஏற்கனவே கண்டறியப்பட்டு வரைபடமாக்கப்பட்டுள்ளன. எனவே, புதிய எண்ணெய் களங்களை கண்டுபிடிப்பதற்காக மிகப்பெரிய அளவில் ஆய்வு மேற்கொள்ள வேண்டிய அவசியம் குறைவாக உள்ளது.
உற்பத்தியில் பின்னடைவு:
வெனிசுலாவிடம் இவ்வளவு பெரிய எண்ணெய் வளம் இருந்தாலும், அதை முழுமையாக உற்பத்தி செய்து சந்தைக்கு கொண்டு வருவதில் அந்நாடு பல ஆண்டுகளாக சிக்கல்களை சந்தித்து வருகிறது.
அந்நாட்டின் எண்ணெய் உற்பத்தி கட்டமைப்பு மோசமாக சேதமடைந்துள்ளதுடன், பராமரிப்பு மற்றும் முதலீட்டு பற்றாக்குறையும் உற்பத்தியை பாதித்துள்ளது.
இதன் காரணமாக, உலகின் மொத்த எண்ணெய் இருப்பில் சுமார் 17 சதவீதத்தை கொண்டிருந்தாலும், வெனிசுலா தற்போது உலகளாவிய எண்ணெய் உற்பத்தியில் சுமார் 1 சதவீதம் மட்டுமே பங்களிக்கிறது.
அமெரிக்கா – வெனிசுலா எண்ணெய் உறவில் புதிய திருப்பம்?
முன்னாள் அதிபர் ஹியூகோ சாவேஸ் ஆட்சிக்காலத்தில், அமெரிக்க எண்ணெய் நிறுவனங்கள் உள்ளிட்ட பல வெளிநாட்டு நிறுவனங்களின் சொத்துகள் தேசியமயமாக்கப்பட்டன.
இதனால் அமெரிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கும் வெனிசுலா அரசுக்கும் இடையே நீண்டகாலமாக பதற்றமான உறவு நிலவி வந்தது. அமெரிக்க எண்ணெய் நிறுவனங்களிடமிருந்து எண்ணெய் வளத்தை வெனிசுலா பறித்ததாகவும் டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள புதிய ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும் பட்சத்தில், இரு நாடுகளுக்கும் இடையிலான எண்ணெய் மற்றும் எரிசக்தி உறவில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.
உலகின் மிகப்பெரிய எண்ணெய் வளங்களில் ஒன்றை வைத்திருக்கும் வெனிசுலாவும், மிகப்பெரிய எரிசக்தி தேவையைக் கொண்ட அமெரிக்காவும் இணையும் இந்த ஒப்பந்தம், எதிர்கால உலகளாவிய எண்ணெய் சந்தையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துமா என்பது சர்வதேச அளவில் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது.

LIVE 24 X 7