கொடைக்கானலில் கொட்டி தீர்க்கும் கனமழை.. அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு
கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் எலிவால் அருவி, பாம்பார்புரம் அருவி, வட்டக்கானல் அருவி, பேரி பால்ஸ் அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் எலிவால் அருவி, பாம்பார்புரம் அருவி, வட்டக்கானல் அருவி, பேரி பால்ஸ் அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
வடக்கு அந்தமான் பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இன்று இரவு ‘டானா’ புயலாக வலுப்பெற உள்ள நிலையில் பாம்பன், நாகை உள்ளிட்ட 9 துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் புதுச்சேரி மாநில நிர்வாகி சரவணன் உடல்நலகுறைவால் உயிரிழந்தார். இந்நிலையில், தவெக தலைவர் விஜய் சரவணின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு போதைப்பொருட்கள் கடத்தலின் கேந்திரமாக விளங்குவது வருத்தமளிக்கிறது. காவல்துறைக்கு முழு சுதந்திரம் வழங்கி போதையில்லா தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டையில் ரயில் விபத்து தொடர்பாக ஸ்டேஷன் மாஸ்டர் உட்பட 4 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இந்நிலையில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உள்ள DGP அலுவலகத்தில் 4 பேரும் இன்று ஆஜராக உள்ளனர்
யூடியூபர் இர்ஃபான் வீடியோ வெளியிட்ட விவகாரம் தொடர்பாக தனியார் மருத்துவமனை மருத்துவமனை மீது மருத்துவத்துறை அதிகாரிகள் புகார் தெரிவித்துள்ளனர். புகாரை தொடர்ந்து மருத்துவரை நேரில் அழைத்து விசாரிக்க காவல்துறை திட்டமிட்டுள்ளது.
சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள ஷியா மசூதிக்கு 4-வது முறையாக மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தியதில் அது புரளி என தெரியவந்தது.
யூடியூபர் இர்ஃபான் தனது குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டிய வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் அவர் மீது என்னென்ன பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யலாம் என்பது குறித்து போலீசார் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீரில் கல்லூரிப் பேருந்து சிக்கியது.
வயநாடு இடைத்தேர்தலில் போட்டியிடும் பிரியங்கா காந்தி வேட்புமனு தாக்கல் செய்வதற்குமுன் காங்கிரஸ் சார்பில் பிரமாண்ட ரோட்ஷோ நடைபெற உள்ளது..