மீண்டும் மீண்டுமா... 16 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
தமிழ்நாட்டில் திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை உள்ளிட்ட 16 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம்
தமிழ்நாட்டில் திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை உள்ளிட்ட 16 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம்
நீதிபதிகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக சவுக்கு சங்கர் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
திருநெல்வேலியில் நீட் பயிற்சி மையத்தில் மாணவர்கள் மீது பயிற்சியாளர் தாக்குதல் நடத்துவது போன்ற வீடியோ சமூக வலைதளத்தில் வெளியானது. இதையடுத்து போலீசார் பயிற்சியாளரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே பெரியசாமிபுரம் கடற்கரையில் குடும்பத்துடன் குளித்த 5 பெண்கள் கடல் அலையில் இழுத்து செல்லப்பட்டனர். அவர்களில் 3 பேர் மீட்கப்பட்ட நிலையில் 2 பேர் உயிரிழந்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே வெட்டுக்காடு கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இடிந்து விழுந்தது. இந்நிலையில், புதிய நீர்த்தேக்க தொட்டி கட்டித்தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ரவுடிகளுக்கு அவர்களின் மொழியில் பாடம் கற்பிக்கப்படும் என கூறியது குறித்து மனித உரிமைகள் ஆணையத்தில் சென்னை காவல் ஆணையர் அருண் விளக்க மனு தாக்கல் செய்தார்.
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் தலைவராக ஓய்வு பெற்ற டிஜிபி சுனில்குமார் நியமிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் புதுவை பாஜக மாநிலங்களவை எம்.பி செல்வகணபதிக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழக அரசு நிர்ணயித்த குறைந்த பட்ச ஊதியம் ரூ.665ஐ வழங்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வயநாடு மக்களவை தேர்தலில் பாஜக சார்பில் குஷ்பூ போட்டியிடுவதாக செய்திகள் வெளியானது. இந்நிலையில் அதற்கு குஷ்பூ மறுப்பு தெரிவித்துள்ளார்.