ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு.. 26 பேர் ஆஜர்
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குண்டர் சட்டம் பாய்ந்து சிறையில் உள்ள 26 பேரையும் சென்னை ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அறிவுரை கழகத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குண்டர் சட்டம் பாய்ந்து சிறையில் உள்ள 26 பேரையும் சென்னை ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அறிவுரை கழகத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர்.
குரூப் 1 தேர்வில் தமிழ்வழி கல்வியில் பயின்றதாக போலிச் சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய மனு இன்று விசாரணைக்கு வந்தது. அதில் அண்ணாமலை பல்கலை., உள்பட 4 பல்கலைக் கழகங்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சேர்த்து நீதிபதி உத்தரவிட்டார்.
நீலகிரி மாவட்டம் உதகை மத்திய பேருந்து நிலையத்தில் சுற்றுலா பயணி - ஆட்டோ ஓட்டுநர் இடையே மோதல் ஏற்பட்டது. இதுதொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
சேலம் மேட்டூர் அருகே தூக்கனாம்பட்டி பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. அத்தியாவசிய பொருட்கள் நீரில் மூழ்கியதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாதுமலை, புதூர்நாடு பகுதியில் நேற்று இரவு பெய்த கனமழையால் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் கிராம மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.
தவெக மாநாடு நடைபெறுவதையொட்டி விளம்பரம் செய்யும் வகையில் அக்கட்சியினர் குடியாத்தம் அரசு பள்ளி சுவற்றில் அனுமதியின்றி போஸ்டர் ஒட்டினர். இதையடுத்து பள்ளி நிர்வாகம் அளித்த புகாரின் அடிப்படையில் போஸ்டர்களை அகற்றி காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
பெங்களூருவில் கொட்டித் தீர்த்த கனமழையால் இருசக்கர வாகனங்கள், கார்கள் மழைநீரில் மூழ்கின. குடியிருப்புகள், சாலைகள் என அனைத்து பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.
யூடியூபர் இர்ஃபான் தனது குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டிய விவகாரத்தில் அவர் மன்னிப்பு கேட்டாலும் விடமாட்டோம் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
கோவை ஆர்.எஸ் புரம் கிழக்கு சம்பந்தம் சாலையில் உணவக உரிமையாளர் வீட்டில் 60 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. பட்டப்பகலில் 2 பேர் ஹெல்மெட் அணிந்து வந்து கொள்ளையடித்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணையில் இருந்து கூடுதல் நீர் வெளியேற்றப்படுவதால் 3 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.