K U M U D A M   N E W S

வீடியோ ஸ்டோரி

ரவுடி சீசிங் ராஜா என்கவுன்ட்டர் வழக்கு... ACP விசாரணைக்கு ஆஜர்

சென்னை நீலாங்கரையில் ரவுடி சீசிங் ராஜா என்கவுன்ட்டர் செய்யப்பட்ட வழக்கில் நீலாங்கரை உதவி ஆணையர் பரத், மனித உரிமை ஆணையத்தில் விசாரணைக்கு ஆஜரானார்.

உதயநிதி ஸ்டாலின் டி ஷர்ட் விவகாரம்... தமிழக அரசு விளக்கமளிக்க உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

துணை முதலமைச்சர் உதயநிதி அரசு நிகழ்ச்சிகளில் கட்சி சின்னம் பொறித்த டி-ஷர்ட் அணிய எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் அரசு ஊழியர்களுக்கான ஆடை கட்டுப்பாடு குறித்த அரசாணை, அரசியல் சட்ட பதவிகளை வகிப்பவர்களுக்கு பொருந்தமா என தமிழக அரசு விளக்கமளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

திமுக நகர்மன்ற தலைவரின் ரகசிய பேச்சு - இணையத்தில் வேகமாய் பரவும் வீடியோ

தென்காசி மாவட்டம் செங்கோட்டை நகர்மன்ற தலைவர் ராமலட்சுமி, கவுன்சிலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதுதொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது.

வீட்டு வேலைக்கு ஆயுள் தண்டனை கைதி பயன்படுத்தப்பட்ட விவகாரம்.. சிறைத்துறை டிஐஜி மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு

வேலூரில் ஆயுள் தண்டனை கைதியை வீட்டு வேலைக்கு பயன்படுத்திய சிறைத்துறை டிஐஜி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் ரூ.426.32 கோடியில் கட்டப்பட்டுள்ள 3,268 அடுக்குமாடி குடியிருப்புகளை கானொளி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

4 நாட்களாக தொடரும் தடை… ஏமாற்றத்தில் சுற்றுலா பயணிகள்

கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் 4வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

கோயிலில் ரீல்ஸ் வீடியோ விவகாரம்.. கேள்விகளால் துளைத்த நீதிபதி |

திருவேற்காடு கோயிலில் முன்னாள் பெண் தர்மகர்த்தா ரீல்ஸ் வீடியோ எடுத்த வழக்கில் முன்னாள் தர்மகர்த்தா வளர்மதியின்  மன்னிப்பை ஏற்று சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்தது.

ஆளுநரிடம் Ph.d. பட்டம் பெற்றவர் புகார் மனு... சட்டென உள்ளே வந்த பாதுகாவலர்

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழாவில் ஆளுநரிடம் ph.d., பட்டம் பெற்றவர் புகார் மனு அளித்தார். ஆராய்ச்சி துறையில் இருப்பவர்கள் ஆராய்ச்சி படிப்பு மேற்கொள்பவர்களை மதிப்பதில்லை என புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - அடித்தது எச்சரிக்கை மணி..!

தமிழ்நாட்டில் நவம்பர் 1ம் தேதி ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் எத்தனை கோடி வாக்காளர்கள்..? - வெளிவந்தது முக்கிய அறிவிப்பு

தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளுக்கான விரைவு வாக்காளர் பட்டியலை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டது. ஆண் வாக்காளர்கள் 3,07,90,791, பெண் வேட்பாளர்கள் 3,19,30,833, 3ம் பாலின வாக்காளர்கள் 8,964 பேர் உள்ளனர்