தமிழ்நாட்டின் முதலமைச்சராக முதல் முறை செய்ன்ட் ஜார்ஜ் கோட்டையில் கொடியேற்றும் விஜய். நாட்டின் 80-வது சுதந்திர தின விழா ஏற்பாடுகள் தீவிரம்.
சென்னை தலைமை செயலகம் எதிரில் மேடைகள் அமைக்கும் பணிகள் மற்றும் கண்காணிப்பு ரோந்து பணிகள் தீவிரம்.
இந்திய நாட்டின் 80-வது சுதந்திர தின விழா வருகிற 15-ந்தேதி (சனிக்கிழமை) நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி சென்னை செய்ன்ட் செயின்ட் ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் விஜய் முதல் முறையாக தேசியக் கொடியை ஏற்றுகிறார். அதற்கு முன் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக் கொள்கிறார். இந்த விழாவில் முதலமைச்சர் விஜய், தமிழ்நாட்டுக்கும், தமிழின வளர்ச்சிக்கும் பங்காற்றியவர்களை பெருமைப்படுத்த தகைசால் தமிழர் விருது ரூ.10 லட்சத்துக்கான காசோலை மற்றும் பாராட்டு சான்றிதழை வழங்க இருக்கிறார்.
மேலும், சுதந்திர தின விழாவில், பல துறைகளுக்கான விருதுகள் வழங்க உள்ளார். குறிப்பாக அறிவியல் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் நபர்களுக்கு டாக்டர். அப்துல் கலாம் விருது, துணிவு மற்றும் சாகசச் செயகள் சிறப்பாக செய்யும் நபர்களுக்கு கல்பனா சாவ்லா விருது, முதலமைச்சரின் நல் ஆளுமை விருது, மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக மிகச்சிறந்த சேவை புரிந்தோருக்கான தமிழ்நாடு அரசு விருதுகள், மகளிர் நலனுக்காக சிறப்பாக தொண்டாற்றிய தொண்டு நிறுவனம் மற்றும் சமூகப் பணிகளுக்கான விருதுகள். சிறந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான முதலமைச்சர் விருதுகள், முதலமைச்சரின் மாநில இளைஞர் விருதுகள் உள்ளிட்ட விருதுகளையும் முதலமைச்சர் விஜய் இவ்விழாவில் வழங்கி கவுரவிக்க உள்ளார்.
அதற்கு முன்னேற்பாடாக, கோட்டை கொத்தளத்தில் சுதந்திரத் தின விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் சென்னை தலைமை செயலகம் எதிரில் மேடை அமைக்கும் பணிகள், வர்ணம் பூசும் பணிகள் அனைத்தும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், சுதந்திர தின விழாவின் முக்கிய நிகழ்வான அணிவகுப்பு ஒத்திகை சென்னை மெரினா கடற்கரையில் கடந்த 7-ஆம் தேதி நடைபெற்றது. சிறப்பாக செய்வதற்காக நாளை 11 மற்றும் 13-ந் தேதிகளிலும் அணிவகுப்பு ஒத்திகை நடத்தப்படுகிறது.
அணிவகுப்பு ஒத்திகை நடக்கும் நாட்களில் தலைமைச் செயலகம் மற்றும் மெரினா சுற்றுவட்டார பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. அணிவகுப்பு ஒத்திகை மற்றும் சுதந்திர தின விழாவை முன்னிட்டு காமராஜர் சாலை, ராஜாஜி சாலை மற்றும் கொடி மர சாலை ஆகியவற்றில் வாகனங்கள் செல்வதற்கு உரிய அனுமதி அட்டை வைத்திருப்பது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.
சுதந்திர விழாவுக்கான பாதுகாப்பு பணிகள் போலீசார் தீவிரப்படுத்தி வருகின்றனர். அனுமதி அட்டை இல்லாத வாகன உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த சாலை பகுதிகளை பயன்படுத்த அனுமதி இல்லை. மேலும் பாதுகாப்பு கருதி விமான நிலையம், ரெயில் நிலையங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
முதலமைச்சர் விஜய் கோட்டையில் முதல்முறை கொடியேற்றப்போகும் நிலையில் சமூக வலைத்தளத்தில் விஜய் ரசிகர்கள் மற்றும் த.வெ.க. தொண்டர்கள் அனைவரும் சமூக வலைதளப் பக்கங்களில் தங்களது மகிழ்வை பதிவிட்டு வருகின்றனர்.

LIVE 24 X 7