தவெக ஆட்சி கவிழ்க்க ஒன்று சேரும் திராவிட கட்சிகள்?… தடுப்பதற்கு தவெக எடுத்துள்ள கேடயம்

தவெக ஆட்சி கவிழ்க்க ஒன்று சேரும் திராவிட கட்சிகள்?…  தடுப்பதற்கு  தவெக  எடுத்துள்ள கேடயம்

தவெக ஆட்சி விரைவில் கவிழும் என்று திமுகவும் அதிமுகவும் மாறி மாறி பேசி வரும் நிலையில், விரைவில் தமிழகத்தில் திமுக ஆட்சி அமையும் என அக்கட்சியின் தலைவர் முக ஸ்டாலின் பேசி இருப்பது அரசியல் களதில் விவாதப் பொருளாக மாறி உள்ளது. அப்படி ஒரு சூழல் ஏற்பட்டால் அதை எதிர்க்கொள்ள தவெகவும் தயாராகி வருவதாக கூறப்படுகிறது. இதற்காகவே திமுகவுக்கு எதிராக ஊழல் புகார்களை தவெக கையில் எடுத்துள்ளதாகவும், அதன் உச்ச கட்டமாகவே அன்பில் மகேஷ் கைது நடவடிக்கை வரை சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Author: kazhugu k தமிழ்நாடு

தவெக ஆட்சி விரைவில் கவிழும் என்று திமுகவும் அதிமுகவும் மாறி மாறி பேசி வரும் நிலையில், விரைவில் தமிழகத்தில் திமுக ஆட்சி அமையும் என அக்கட்சியின் தலைவர் முக ஸ்டாலின் பேசிய இருப்பது அரசியல் களதில் விவாதப் பொருளாக மாறி உள்ளது.

சென்னையில் நடைபெற்ற முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு இல்ல திருமண நிகழ்ச்சியில் பேசிய முக ஸ்டாலின், தவெக ஆட்சியை கடுமையாக விமர்சித்தார். மாற்றம் என்று கூறி வந்த கட்சியால் தமிழகத்திற்கு ஏமாற்றமே கிடைதுள்ளதாக குறிப்பிட்டார். தமிழகத்தில் 6 மாதமாக, ஒரு ஆட்சி, காட்சியாக மட்டுமே நடந்து கொண்டிருப்பதாக தெரிவித்தார்.

திரையில் கதாநாயகனாக நடித்த ஒருவர் நிஜ வாழ்க்கையில் வில்லனாக உலா வருவதாக விமர்சித்த ஸ்டாலின் விரைவில் திமுக ஆட்சி அமையும் என்றும் பேசி உள்ளார். தவெக ஆட்சி கவிழும் என்ற தோணியிலேயே அவர் பேசி உள்ளார்.

திமுக மட்டும் அல்லாமல் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியில் தொடங்கி, அக்கட்சியின் இரண்டாம் நிலை தலைவர்கள் எல்லோரும் தவெக ஆட்சி கவிழும் என்றே பேசி வருகின்றனர். தவெக ஆட்சி தானாகவே கவிழும் என்றும் அதற்கு எதுவும் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்றும் இபிஎஸ் கூறியிருந்தார்.

இதன் தொடர்ச்சியாக தவெக வில் பதவி கிடைக்காத காரணத்தால் பெரும்பாலான எம்எல்ஏக்கள் அதிருப்தியில் உள்ளதாகவும் அவர்கள் தவெகவில் இருந்து வெளியேறுவர்கள் என்றும், அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேசியிருந்தார்.

இது ஒருபுறம் இருக்க தவெக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர திட்டமிட்டிருப்பதாகவும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு சில விஷயங்களை பொதுவெளியில் பேச முடியாது என்று இபிஎஸ் கூறியிருந்தார்.

ஆனால் இதெல்லாம் எதிர்க்கட்சிகள் அரசியலுக்காக செய்யும் செயல்கள் என்று கூறும் தவெக கூட்டணி கட்சித்தலைவர்கள், ஆட்சியை ஒருபோதும் கவிழ விடமோட்டோம் என்று உறுதிபட தெரிவித்து வருகின்றனர். ஆட்சி கவிழ்ப்பு பேச்சுகள் அரசியலுக்காக எதிர்க்கட்சிகளின் வழக்கமான அரசியல் நகர்வுகள் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இப்படி இருக்க ஆட்சியை கவிழ்க்க திமுகவும் அதிமுகவும் தொடர்ந்து சதி செய்து வருவதாகவும் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க முயற்சி செய்து வருவதாகவும் தவெக தலைவர்கள் கூறிவருகின்றனர். பாஜகவுடன் சேர்ந்து திமுக ஆட்சியை கைப்பற்ற முயற்சி செய்வதாக அவர்கள் வெளிப்படையாகவே குற்றம்சாட்டி வருகின்றனர்.

திமுகவும் அதிமுகவும் கைக்கோர்த்து செய்படுவதாக, முதலமைச்சர் விஜய் ஏற்கனவே குற்றம் சாட்டிருந்தார்.

இந்த நிலையில் தான் திமுக தலைவர் முக ஸ்டாலின், விரைவில் திமுக ஆட்சி அமையும் என்று மீண்டும், மீண்டும் பேசி உள்ளார். விஜய் தலைமையில் தவெக கூட்டணி ஆட்சி அமைந்து ஆறுமாதங்கள் கடந்த நிலையில், மகளிர் வெற்றிப்பயணம், தாய்மாமன் தங்க மோதிரம், அண்ணன் சீர் என பல்வேறு திட்டங்களை செயல் படுத்தப்பட்டுள்ளன.

இந்த திட்டங்களை தவெகவினர் சாதனையாக கூறி வரும் நிலையில் சட்டம் ஒழுங்கு, சிறுமிகள் காணாமால் போன சம்பவங்கள் உள்ளிட்டவை தவெக அரசுக்கு நெருக்கடியாக அமைந்துள்ளன. இந்த பிரச்சினைகள் தொடர்பாக திமுகவும் அதிமுகவும், தவெக அரசை கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், நம்பிக்கை இல்லா தீர்மானம் போன்ற நகர்வுகளுக்கு திமுக, அதிமுகவினர் ஒன்றிணைந்து செயல்படதொடங்கி விட்டார்களோ என்ற ஐய்யப்பாடு எழுந்துள்ளது. அப்படி ஒரு சூழல் ஏற்பட்டால் அதை எதிர்க்கொள்ள தவெகவும் தயாராகி வருவதாக கூறப்படுகிறது.

இதற்காகவே திமுகவுக்கு எதிராக ஊழல் புகார்களை தவெக கையில் எடுத்துள்ளதாகவும் அதன் உச்ச கட்டமாகவே அன்பில் மகேஷ் கைது வரை நடவடிக்கை சென்றுள்ளதாக கூறப்படுகிறது.