கோடைக்காலங்களில் உதகையை நோக்கி சுற்றுலா பயணிகள் படையெடுப்பதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதையடுத்து, வெளி மாநில மற்றும் வெளி மாவட்ட பதிவெண் கொண்ட வாகனங்கள் இ-பாஸ் பெற்றிருந்தால் மட்டுமே நீலகிரி மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்பட்டது. ஆனால், உள்ளூர் பதிவெண் கொண்ட வாகனங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் காஷ்மீரில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தின் எதிரொலியாக உள்ளூர், வெளியூர் என அனைத்து வாகனங்களும் நீலகியில் உள்ள 16 சோதனைச்சாவடிகளிலும் காவல்துறையினரால் சோதனைக்குட்படுத்தப்பட்ட பின்னரே நீலகிரி மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றன.
நீலகிரி மாவட்டத்தில் வரும் 25 மற்றும் 26-ஆம் தேதிகளில் துணைவேந்தர் மாநாடு நடைபெறவுள்ளது. இதில், துணை குடியரசுத் தலைவர் ஜெக்தீப் தன்கர், ஆளுநர் ஆர்.என்.ரவி ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளதால் மாவட்ட காவல் துறை கண்காணிப்பு பணியினை தீவிரப்படுத்தியுள்ளனர்.
LIVE 24 X 7









