இதனால் அதிர்ச்சியுற்ற அப்பெண் கீழே கிடந்த மதுபான பாட்டிலை எடுத்து அந்த வாலிபரின் தலையில் ஓங்கி அடித்துள்ளார். பதறிப்போன வாலிபர் பைக்கில் ஏறி தப்பியுள்ளார். இச்சம்பவத்திற்கு பிறகு அப்பெண் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து நடந்த சம்பவங்களை தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து மணிமங்கலம் காவல்துறையினர், அப்பெண் கூறிய அடையாளங்களை வைத்து அதே நாவலூர் பகுதியில் தங்கியுள்ள வாலிபர் ஒருவரை கைது செய்து விசாரணை செய்தனர்.
விசாரணையில் கைது செய்யப்பட்ட வாலிபர் பெயர் காந்தியப்பன் என்பதும் (வயது 24) நாவலூர் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வருகிறார் என்பதும் தெரியவந்தது. விசாரணையின் போது பாலியல் தொல்லை கொடுத்ததை ஒப்புக்கொண்டதால் அவரை மணிமங்கலம் காவல் துறையினர் கைது செய்து மேலும் விசாரணை செய்து வருகிறார்கள்.
சுமார் 2000-க்கும் மேற்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள் நிறைந்த நாவலூர் பகுதியில் நுழைவு வாயிலில் புற காவல் நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. சுமார் 10,000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்ற இப்பகுதியில் புறக்காவல் நிலையம் இருந்தும் கண்காணிப்பு கேமரா வைக்காதது குற்ற செயல்கள் அதிகரிக்க உறுதுணையாக உள்ளது என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
LIVE 24 X 7









