ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளரும், பிரபல யூடியுபருமான மாரிதாஸ், தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் தவெக அரசுக்கு எதிராக அவதூறு கருத்துக்களை பரப்பிய வழக்கில், கடந்த ஜுன் 8 தேதி சைபர் க்ரைம் போலீசாரால் மதுரையில் உள்ள அவரது வீட்டில் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், சொந்த ஜாமினில் வெளியில் வந்த அவருக்கு புதிய தலைவலியாக அமைந்துள்ளார் அதிமுக எம்எல்ஏ லீமா ரோஸ்ஸின் சகோதரரான ஜான் பிரிட்டோ.
சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மாரிதாஸிற்கு எதிராக ஜான் பிரிட்டோ புகார் ஒன்றினை அளித்துள்ளார். அதில், தன்னை குறித்தும் தனது சகோரதரிக் குறித்தும் மாரிதாஸ் அவதூறு பரப்பி வருவதாகக் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஜான் பிரிட்டோ, “நான் கோயம்புத்தூரில் பிளாஸ்டிக் மறுசூழற்சி செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறேன். என்னுடைய தங்கை லால்குடி தொகுதியில் எம்எல்ஏ வாக இருந்து வருகிறார். என்னைப் பற்றியும் என் சகோதரி பற்றியும் சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
யூடியுபர் மாரிதாஸ், போதைப்பொருள் விவகாரத்தில் என்னை இணைத்து தவறாக சித்தரித்து உள்ளார். போதைப்பொருள் வழக்கில் சிக்கிய அந்த ஜான் பிரிட்டோ நான் இல்லை, அது வேறு நபர். என் மீது கேரளத்தில் லாட்டரி சம்பந்தமான ஒரு வழக்கு மட்டும்தான் உள்ளது. அது தற்போது நிலுவையிலும் இருக்கிறது. ஆனால் போதைப்பொருள் சம்பந்தமாக எந்த வழக்கும் என் மீது இல்லை” என்றும் அவர் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர் “என்னுடைய பெயரை கெடுப்பதற்காகவே இதுபோன்ற செயலில் சிலர் ஈடுபடுகிறார்கள். இது முழுக்க முழுக்க அரசியல் உள்நோக்கம் கொண்டது” என்றும் தெரிவித்தார்.
ஏற்கனவே, அவதூறு கருத்துக்களை பரப்பி பெரும் சிக்கலில் உள்ள யூடியுபர் மாரிதாஸுக்கு, அடிமேல் அடி விழுவதால் என்ன செய்வது என்று தெரியாமல் விழிபிதுங்கி நிற்பதாகக் கூறப்படுகிறது.

LIVE 24 X 7