தமிழ்நாடு

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் வெளுத்து வாங்கும் கன மழை!

மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை தொடர்வதால் மணிமுத்தாறு அருவியில் குளிக்க இன்று 7-வது நாளாக தடை நீடிக்கிறது.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் வெளுத்து வாங்கும் கன மழை!
தென்காசி மாவட்டங்களில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக கன மழை பெய்ந்து வருகிறது. நகர் பகுதிகளில் மிதமான மழை பெய்ந்து வருகிறது. ஒரு சில இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது.

ஆனால் அணை பகுதிகளில் மட்டும் கன மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.
இதனால் அணைகள் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.மாவட்டத்தின் பிரதான அணையான 143 அடி உயரம் கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் கடந்த ஒரு வாரமாகவே கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. நேற்று காலை 80.7 அடியாக இருந்த அணை நீர்மட்டம் இன்று 4 அடி உயர்ந்து 84½ அடியை எட்டி உள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை தொடர்வதால் மணிமுத்தாறு அருவியில் குளிக்க இன்று 7-வது நாளாக தடை நீடிக்கிறது. அதேநேரம் அருவியை சுற்றுலா பயணிகள் பார்வையிட அனுமதிக்கப்படுகின்றனர்.