தமிழ்நாடு

வார கடைசியில் ஹேப்பி நியூஸ்.. கணிசமாக குறைந்த தங்கம் விலை!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்துள்ளது.

வார கடைசியில் ஹேப்பி நியூஸ்.. கணிசமாக குறைந்த தங்கம் விலை!
Gold Rate
செப்டம்பர் மாத தொடக்கத்தில் இருந்தே ஆபரணத் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கங்களைக் கண்டு வருகிறது. இந்த நிலையில், தங்கம் விலை இன்று (செப்.26) கணிசமான சரிவைக் கண்டுள்ளது.

சென்னையில் கடந்த 22-ஆம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.680 குறைந்து ரூ.1,13,480-க்கும் விற்பனையானது. தொடர்ந்து 23-ஆம் தேதி சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.1,13,080-ஆகவும், 24-ஆம் தேதி அதிரடியாகச் சவரனுக்கு ரூ.1,080 குறைந்து ரூ.1,12,000-ஆகவும் சரிந்தது.

நேற்றைய தினம் சவரனுக்கு ரூ.80 அதிகரித்து ரூ.1,12,080-க்கும், கிராமுக்கு ரூ.10 அதிகரித்து ரூ.14,010-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், சென்னையில் இன்று (செப்.26) ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.1,12,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், கிராம் ஒன்றுக்கு ரூ.10 குறைந்து ரூ.14,000-க்கு விற்பனையாகிறது.

வெள்ளி விலையைப் பொறுத்தவரை இன்று எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அதன்படி, ஒரு கிராம் வெள்ளி ரூ.250-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,50,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.