தமிழ்நாடு

Gold Rate: ஏறுமுகத்தில் தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.3,280 உயர்வு!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது.

Gold Rate: ஏறுமுகத்தில் தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.3,280 உயர்வு!
Gold Rate
சென்னையில் கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலை, கடந்த இரு தினங்களாகத் தொடர்ந்து அதிகரித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.14,175-க்கும், சவரன் ரூ.1,13,400-க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, செப்டம்பர் 2-ஆம் தேதி கிராமுக்கு ரூ.225-ம், சவரனுக்கு ரூ.1,800-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.13,950-க்கும், சவரன் ரூ.1,11,600-க்கும் விற்பனையானது.

ஆனால், நேற்று (செப்டம்பர் 3) தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து, கிராமுக்கு ரூ.290-ம், சவரனுக்கு ரூ.2,320-ம் அதிகரித்து ஒரு கிராம் ரூ.14,240-க்கும், சவரன் ரூ.1,13,920-க்கும் விற்பனையானது.

இந்நிலையில், இன்றைக்கும் தங்கத்தின் விலை மேலும் உயர்வைக் கண்டுள்ளது. கிராமுக்கு ரூ.120 உயர்ந்து, ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.14,360-க்கு விற்பனையாகிறது. அதேபோல், சவரனுக்கு ரூ.960 அதிகரித்து, ஒரு சவரன் தங்கம் ரூ.1,14,880 என்ற நிலையை எட்டியுள்ளது. இதன் மூலம், நேற்று மற்றும் இன்று ஆகிய இரு நாட்களில் மட்டுமே சவரனுக்கு ரூ.3,280 வரை தங்கம் விலை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், வெள்ளியின் விலையில் இன்று எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.255-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,55,000-க்கும் நேற்றைய விலையிலேயே தொடர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.