தொடர்ச்சியான விலையேற்றம்
கடந்த 23-ஆம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.85 ஆயிரத்தைத் தாண்டி இதுவரை இல்லாத உச்சத்தைப் பதிவு செய்திருந்தது. அதன் பிறகு சற்றுக் குறைந்திருந்தாலும், கடந்த 26-ஆம் தேதி முதல் மீண்டும் ஏறுமுகத்தில் சென்று நேற்று முன்தினம் (செப். 27) ஒரு சவரன் ரூ.85,120-க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்றும் இதே விலைக்கே விற்பனை ஆனது.
இன்று காலை மற்றும் பிற்பகல் நிலவரம்
வாரத் தொடக்க நாளான இன்று காலை நிலவரப்படி, முதல் முறையாக தங்கம் விலை உயர்ந்து, ஒரு சவரன் ரூ.85,600-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் ரூ.10,700-க்கு விற்பனை செய்யப்பட்டது.
ஆனால், இன்று பிற்பகலில் தங்கம் விலை இரண்டாவது முறையாகவும் அதிவேகமாக அதிகரித்தது. ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு மேலும் ரூ.560 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.86,160-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கிராமுக்கு மேலும் ரூ.70 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.10,770-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம், தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,040-ம், கிராமுக்கு ரூ.130-ம் அதிகரித்துள்ளது.
சர்வதேச சந்தையில் ஏற்படும் பொருளாதார மாற்றங்கள், டாலரின் மதிப்பு மற்றும் உலகளாவிய சந்தை நிலவரங்கள் ஆகியவை இந்தத் தொடர்ச்சியான விலை உயர்வுக்குக் காரணமாக இருக்கலாம் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
LIVE 24 X 7









