தமிழ்நாடு

பெண்களுக்கு குட் நியூஸ்... தங்கத்தின் விலை மீண்டும் சரிவு!

நகை பிரியர்களுக்கு மகிழ்ச்சி தரும் விதமாக வாரத்தின் முதல் நாளான இன்று தங்கம் விலையில் அதிரடி மாற்றம் ஏற்பட்டுள்ளது.

பெண்களுக்கு குட் நியூஸ்... தங்கத்தின் விலை மீண்டும் சரிவு!
Gold Price Today
தங்கம் விலை இன்று சென்னையில் கணிசமாக குறைந்துள்ளது. சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை சரிவை சந்தித்துள்ள நிலையில், அதன் தாக்கம் இந்திய சந்தையிலும் எதிரொலித்துள்ளது. இதனால் வாரத்தின் முதல் நாளான இன்று ஆபரணத் தங்கத்தின் விலை "சவரனுக்கு ரூ.480" குறைந்துள்ளது.

தொடர்ந்து ஏற்ற இறக்கத்தில் இருக்கும் தங்கம் விலை :

கடந்த சில வாரங்களாகவே தங்கம் விலை நிலையான போக்கில் இல்லாமல் தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலர் மதிப்பு, முதலீட்டாளர்களின் எதிர்பார்ப்பு உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் தங்கத்தின் விலையில் அடிக்கடி மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன.

ஒரு சில நாட்களில் பெரிய அளவில் உயர்வை சந்திக்கும் தங்கம் விலை, அடுத்தடுத்த நாட்களிலேயே சரிவையும் சந்தித்து வருகிறது. இதனால் நகை வாங்க திட்டமிடுபவர்கள் தினசரி தங்கம் விலை நிலவரத்தை கவனித்து வருகின்றனர்.

கடந்த சில நாட்களில் ஏற்பட்ட விலை மாற்றங்கள் :

சென்னையில் கடந்த சில நாட்களில் தங்கம் விலையில் பெரிய அளவில் ஏற்ற இறக்கங்கள் பதிவாகின. கடந்த 2-ம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.1,800 வரை குறைந்து ரூ.1,11,600-க்கு விற்பனை செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து மறுநாளே தங்கம் விலை மீண்டும் உயர்ந்து சவரனுக்கு ரூ.2,320 அதிகரித்து ரூ.1,13,920-க்கு சென்றது. தொடர்ந்து அடுத்த நாளும் சவரனுக்கு ரூ.960 உயர்ந்து ரூ.1,14,880 என்ற நிலையை எட்டியது.

பின்னர் கடந்த சனிக்கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,360 குறைந்து ரூ.1,13,520-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதையடுத்து இன்று மீண்டும் தங்கம் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளது.

இன்றைய  விலை :

இன்றைய தங்கம் விலை நிலவரப்படி, சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் "ரூ.480 குறைந்து ரூ.1,13,040-க்கு" விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை "ரூ.60 குறைந்து ரூ.14,130-ஆக" உள்ளது. அதேபோல், வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லாமல் "ஒரு கிராம் வெள்ளி ரூ.255-க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.2 லட்சத்து 55 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை இன்று குறைந்திருப்பது நகை வாங்க காத்திருப்பவர்களுக்கு சற்று நிம்மதியை அளித்துள்ளது. இருப்பினும் சர்வதேச சந்தை நிலவரத்தை பொறுத்து அடுத்தடுத்த நாட்களில் விலையில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.