மிரட்டல் விடுத்த இமெயில் கிடைத்த உடனேயே, போலீசார் அவசரமாகச் சம்பவ இடங்களுக்கு விரைந்து சென்றனர். ஆளுநர் மாளிகை மற்றும் எடப்பாடி பழனிசாமியின் வீட்டில் வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் படையுடன் தீவிர சோதனை நடத்தப்பட்டது. சோதனையின் முடிவில், எந்தவித வெடிபொருட்களும் கண்டறியப்படவில்லை.
அதிகாரிகளின் விசாரணையில், வந்த மிரட்டல் ஒரு புரளி என்பது உறுதியானது. இந்த மிரட்டல் காரணமாக, இரண்டு முக்கிய இடங்களிலும் பெரும் பதற்றம் நிலவி, பின்னர் தணிந்தது. மிரட்டல் இமெயிலை அனுப்பிய நபர் குறித்து, சைபர் கிரைம் பிரிவு காவல்துறையினர் தொடர்ந்து புலன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
LIVE 24 X 7









