சென்னையின் பிரதான சாலைகளில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில், இளைஞர்கள் சிலர் போலீஸ் பேரிகார்டை இழுத்துக்கொண்டும், ஆபத்தான முறையில் பைக் வீலிங் செய்தும் சாகசத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் கடந்த சில ஆண்டுகளாக இளைஞர்கள் இரவு நேரத்தில் பைக் ரேஸில் ஈடுபடும் சம்பவங்களை போலீசார் கட்டுப்படுத்து வைத்திருந்தனர். இந்த நிலையில், தற்போது சென்னையில் மீண்டும் பைக் ரேஸ் மற்றும் வீலிங் சம்பவங்கள் தலைதூக்குகிறது. சென்னையின் முக்கியப் பகுதிகளான அடையாறு மற்றும் பெசன்ட் நகர் உள்ளிட்ட சாலைகளில், நள்ளிரவில் 5-க்கும் மேற்பட்ட பைக்குகளில் வந்த வாலிபர்கள் சிலர் அதிவேகமாக பைக் ரேஸில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பைக்கின் முன் சக்கரத்தை தூக்கி 'வீலிங்' சாகசம் செய்துள்ளனர்.
நெட்டிசன்களை அதிர்ச்சியடைய வைத்த விஷயம் என்னவென்றால், அந்த வழியில் காவல்துறையின் ரோந்து வாகனம் ஒன்று நின்று கொண்டிருக்கிறது; அதனருகிலேயே இந்த இளைஞர்கள் எவ்வித பயமுமின்றி அட்ராசிட்டி செய்து சாகசத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், சாலையில் பாதுகாப்புக்காகப் போலீசார் வைத்திருந்த இரும்புப் பேரிகார்டை, வேகமாகச் செல்லும் பைக்கில் இருந்தபடியே ஆபத்தான முறையில் இழுத்துக்கொண்டு சாலையில் உரசியபடி சென்றுள்ளனர். இந்த ஒட்டுமொத்தக் காட்சிகளும் பின்னால் வந்தவர்களால் வீடியோ எடுக்கப்பட்டு இணையத்தில் வைரலாகி வருகிறது.
"போலீசார் இருக்கும் இடத்திலேயே இவ்வளவு துணிச்சலாகச் சாகசம் செய்கிறார்களே?" என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வரும் வேளையில், பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் வாகனங்களை இயக்கிய அந்த நபர்களைக் காவல்துறை உடனடியாக அடையாளம் கண்டு, கைது செய்ய வேண்டும் என்று சமூக வலைதளங்களில் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

LIVE 24 X 7