புதுமணமகன் உயிரிழப்பு
இந்நிலையில் புதுமண தம்பதிகள் காரில் வேளாங்கண்ணிக்கு நேற்று சென்று விட்டு இன்று அதிகாலை துவாக்குடி அருகே உள்ள திருச்சி அரை வட்ட சாலையில் வந்து கொண்டிருந்த பொழுது எதிரே வந்த கண்டைனர் லாரி மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே டொனாட் பரிதாபமாக உயிரிழந்தார். அமுல்யா (34)பலத்த காயமடைந்தார்.
இச்சம்பவம் குறித்து துவாக்குடி போலீசாருக்கு தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கார் விபத்தில் சிக்கிய கணவன் மனைவியை மீட்க முடியாதததால் திருவெறும்பூர் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
போலீசார் விசாரணை
அதன் அடிப்படையில் அங்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் போராடி மீட்டனர். இருவரையும் துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அமல்யாவுக்கு முதல் கட்ட சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். துவாக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
LIVE 24 X 7









