தஞ்சாவூரில் தி.மு.க. சார்பில் அரசுக்கு எதிராக நடத்தப்பட்ட போரட்டத்தில் விஜயையும், நடிகையையும் தொடர்புபடுத்தி விமர்சித்ததற்காக எதிர்க்கட்சித் தலைவரும், தி.மு.க. இளைஞரணி தலைவருமான உதயநிதி ஸ்டாலின் கைதான பிறகு "இந்த கைது நடவடிக்கையை நான் காமெடியாக பார்க்கிறேன்" என்று பேட்டி அளித்துள்ளார்.
தஞ்சாவூரில் நேற்று ஆகஸ்ட் 3-ந் தேதி விவசாயிகளுடனான போராட்டத்தில் மேகதாது அணை கட்டுவதற்கு எதிராக விஜய் தீவிரம் காட்டவேண்டும் எனவும், த.வெ.க. அரசு அளித்த பயிர் கடன் தள்ளுபடி என்ற வகுருதியின்படி பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரியும் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், “முதல்வர் விஜய்க்கு இருக்கக்கூடிய ஒரே கவலை, தி.மு.க. மீது என்ன பொய் வழக்கு போடலாம் என்பது மட்டுமே. எங்குத் தண்ணீர் வருகிறதோ இல்லையோ, அங்கு ”தண்ணீர்” வர வேண்டும் (நான் காவிரியைச் சொன்னேன்)” என்று பேசியிருந்தார்.
அதுமட்டுமின்றி, “திருட்டு லாட்டரி விற்கிற ஓர் அமைச்சர்; திருட்டு வி.சி.டி விற்கிற ஓர் அமைச்சர்; பிளாக் டிக்கெட் விற்கிற ஓர் அமைச்சர்; உருட்டுக் கட்டையோடு சுற்றித் திரிகின்ற ஓர் அமைச்சர்; எல்லாவற்றிற்கும் மேலாகப் போதைப் பவுடர் அமைச்சர்.. இப்படி மொத்த அமைச்சரவையுமே ஒரு ஜோக்கர் கூட்டமாக இன்றைக்குத் தமிழ்நாட்டில் அமைந்திருக்கிறது.. தரங்கெட்ட அரசு” த.வெ.க எம்.எல்.ஏ.க்களை பற்றியும் அமைச்சர்களை பற்றியும் விமர்சித்து பேசியுள்ளார்.
இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் வீட்டின் முன்பு காவல்துறையினர் குவிக்கப்பட்டு தஞ்சை காவல்துறையினர் உதயநிதி ஸ்டாலினை கைது செய்து விசாரணைக்காக அழைத்து சென்று உள்ளனர். கைதுக்கு பின்னர் அவரிடம் "இந்த கைதை எப்படி பார்க்கிறீர்கள்" என்று கேட்ட கேள்விக்கு அவர் "“என் மீதான கைது நடவடிக்கையை காமெடியாக பார்க்கிறேன்” ,"மேகதாது அணையை கட்ட தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள திராணி இல்லாத அரசு, விவசாயிகளுக்கு பதில் சொல்ல வக்கில்லாத அரசு சட்டப்பேரவையில் பேசினால் மட்டும் இவர்கள் பதில் சொல்லுவார்களா?" என்றும் கைதுக்கு கண்டனம் தெரிவித்துளளார்.
மேலும் " தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என ஆர்ப்பாட்டத்தில் பேசினேன். டம்மி முதல்வருக்கு ரீல்ஸ் வெறி முற்றிப் போய் உள்ளது. முதல்-அமைச்சர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் ரீல்ஸ் வெறியில் உள்ளனர்.
நான் பேசாத ஒன்றை பேசியதாக கட், காப்பி, பேஸ்ட் பன்னி பொய் செய்தி பரப்புகின்றனர். என் மீது பொய் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கைது நடவடிக்கையை காமெடியாக பார்க்கிறேன். இதற்கெல்லாம் பயப்படக்கூடிய ஆள் நான் கிடையாது. திமுகவின் கடைசி தொண்டன் கூட கைதுக்கு பயப்படுபவர்கள் கிடையாது. காவிரி பிரச்சினையை திசை திருப்ப என் மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கைது நடவடிக்கையை சட்டப்படி எதிர்கொள்வேன்." என்றும் அவர் பதிலளித்தார்.
கைது செய்வதற்கு முன்பாக உதயநிதி மீது 6 வழக்குகள் பதியப்பட்ட நிலையில் தற்போது 9 வழக்குகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரியப்பட்டுள்ளது. தஞ்சையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் உதயநிதி ஸ்டாலினை தஞ்சாவூருக்கு காவல்துறையினர் கைதுசெய்து அழைத்துகொண்டு செல்கின்றனர்.

LIVE 24 X 7