வழக்கின் பின்னணி
குறிப்பிட்ட அந்தப் பொதுக்கூட்டத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி, முன்னாள் அமைச்சர்கள் ஜெயகுமார், எடப்பாடி பழனிசாமி, தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை மற்றும் நடிகை குஷ்பு ஆகியோர் குறித்து அருவருக்கத்தக்க மற்றும் ஆபாசமான முறையில் பேசியதாகச் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது புகார் எழுந்தது. இது தொடர்பாகக் கொடுங்கையூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
நீதிமன்றத்தின் அதிரடித் தீர்ப்பு
இந்த வழக்கு சென்னை எழும்பூர் 10-வது பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் பி.ரேவதி, அரசு தரப்பில் முன்வைக்கப்பட்ட சாட்சியங்களை ஆய்வு செய்தார். இதில், "கலகத்தைத் தூண்டுவது" என்ற குற்றச்சாட்டை மட்டும் அரசு தரப்பு நிரூபிக்கவில்லை என்று குறிப்பிட்ட நீதிபதி, மற்ற அனைத்துக் குற்றச்சாட்டுகளும் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
இதனடிப்படையில், சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு 3 ஆண்டுகள் மற்றும் 3 மாத சிறைத் தண்டனை மற்றும் 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
முன்னதாக, இந்தப் பேச்சுக்கள் வெளியான போதே திமுக தலைமை சிவாஜி கிருஷ்ணமூர்த்தியைக் கட்சியிலிருந்து நீக்கி நடவடிக்கை எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
LIVE 24 X 7









