மத்தியப் பிரதேச மாநிலம் சிவ்புரி மாவட்டத்தில், யூடியூபர் (YouTuber) பெண் ஒருவர் தனது தங்கம், பணம் மற்றும் ஆடம்பர வாழ்க்கையைச் சமூக வலைதளங்களில் வீடியோவாக வெளியிட்டதே, அவரது வீட்டில் நடந்த கொள்ளைச் சம்பவத்திற்கு வழிவகுத்துள்ளது.
சிவ்புரி மாவட்டத்தின் மோகனி கிராமத்தைச் சேர்ந்தவர் ரச்னா குர்ஜார். இல்லத்தரசியான இவருக்கு யூடியூபில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பின்தொடர்பவர்கள் (Followers) உள்ளனர். கடந்த சனிக்கிழமை அதிகாலை 2 மணியளவில், ரச்னா குர்ஜாரின் வீட்டிற்குள் புகுந்த அடையாளம் தெரியாத கொள்ளையர்கள், அவரையும் அவரது குடும்பத்தினரையும் ஒரு அறைக்குள் வைத்துப் பூட்டினர்.
பின்னர், வீட்டில் இருந்த தங்கம், வெள்ளி நகைகள், ரொக்கப் பணம் மற்றும் ஒரு அட்டைப்பெட்டி எனர்ஜி டிரிங்க் (Energy drink) ஆகியவற்றைத் திருடிக்கொண்டு தப்பினர். திருடப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு 8 முதல் 10 லட்சம் ரூபாய் வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
திட்டமிட்ட கொள்ளை
அதிகாலை 4 மணியளவில் விழித்துப் பார்த்த குடும்பத்தினர், அறை வெளிப்பக்கமாகப் பூட்டப்பட்டிருப்பதை உணர்ந்து தங்களது உறவினர்களுக்குத் தகவல் கொடுத்தனர். உறவினர்கள் வந்து கதவைத் திறந்து அவர்களை மீட்டனர்.
இச்சம்பவம் குறித்து நர்வார் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கொள்ளையர்கள் தங்களது முகம் பதிவாகாமல் இருக்க, சிசிடிவி கேமராக்களின் கோணங்களைத் தடியைப் பயன்படுத்தி மாற்றியுள்ளனர். இருப்பினும், முகமூடி அணிந்த கொள்ளையன் ஒருவன் தடியால் கேமராவைத் திருப்பும் காட்சி ஒரு சிசிடிவியில் பதிவாகியுள்ளது. கொள்ளையர்கள் அதே கிராமத்தைச் சேர்ந்தவர்களாகவோ அல்லது அத்துப்படியானவர்களாகவோ இருக்கலாம் எனப் போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
சமூக வலைதள ஆபத்து
ரச்னா குர்ஜார் சமீபத்தில் தனது வீடு, நகைகள் மற்றும் பணத்தைச் சமூக வலைதளங்களில் வீடியோவாகப் பதிவிட்டிருந்தார். ஒரு வீடியோவில் வீட்டின் வாசல் முதல் அறைகள் வரை அனைத்தையும் காட்டியுள்ளார். மற்றொரு வீடியோவில் மேஜை மீது நகைகளையும் பணத்தையும் அடுக்கி வைத்துக் காட்டியுள்ளார்.
கொள்ளையர்கள் இந்த வீடியோக்களைப் பார்த்து வீட்டின் வரைபடம் மற்றும் நகைகள் இருக்கும் இடத்தை முன்கூட்டியே திட்டமிட்டு இந்தக் கொள்ளையை அரங்கேற்றியிருக்கலாம் எனப் போலீஸார் கருதுகின்றனர். ஆன்லைனில் ஆடம்பரத்தைக் காட்டியது குற்றவாளிகளுக்கு வழிகாட்டியாக மாறியுள்ள இந்தச் சம்பவம், சமூக வலைதளங்களில் தனிப்பட்ட விபரங்களைப் பகிர்வது குறித்த பெரும் எச்சரிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

LIVE 24 X 7