பிரதமர் மோடி ரோடு ஷோ
இதற்கான குஜராத் மாநிலத்திற்கு சென்ற பிரதமர் மோடி பாவ்நகரில் ரோடு ஷோ சென்றார். இதனால் பாவ் நகர் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. பிரதமர் மோடியின் வருகையையொட்டி பாஜக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் உற்சாக மலர்கள் தூவி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பிரதமர் மோடியின் பயணம் குறித்து மத்திய அரசு சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், குஜராத்தில் காலை 10.30 மணிக்கு பாவ் நகரில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி, ரூ.34,200 கோடி மதிப்பிலான பல வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அவர் உரையாற்றினார்.
வளர்ச்சி திட்டப்பணிகள்
மேலும் பிரதமர் மோடி தோலேராவை வான்வழியாக ஆய்வு செய்கிறார். பிற்பகல் 1.30 மணியளவில் மறு ஆய்வுக்கூட்டத்திற்கு தலைமை தாங்க உள்ளார். பின்னர் லோத்தலில் உள்ள தேசிய கடல்சார் பாரம்பரிய வளாகத்தைப் பார்வையிட உள்ளார். கடல்சார் துறைக்கு பிரதமர் மோடி ரூ.7,870 கோடிக்கு மேம்பாட்டுத் திட்டங்களை தொடங்கி வைத்து அடிக்கல் நாட்ட உள்ளார்.
மேலுன் இந்திரா கப்பல்துறையில் மும்பை சர்வதேச கப்பல் முனையத்தையும் திறந்து வைக்க உள்ளார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
LIVE 24 X 7









