கமல்ஹாசன் பேச்சுக்கு கண்டனம்
அதில் பேசிய கமல்ஹாசன், உயிரின் உறவே தமிழே எனது வாழ்க்கையும், குடும்பமும் தமிழ் மொழிதான். எனது குடும்பம் இங்கு இருக்கிறது. அவரது மொழி (கன்னடம்) தமிழ் மொழியில் இருந்து பிறந்தது. அவரும் நமது குடும்பத்தில் ஒரு அங்கமாவார் என்று தெரிவித்திருந்தார்.
கன்னடம் தமிழ் மொழியில் இருந்து பிறந்தது என கமல்ஹாசன் கூறியதால் பல்வேறு கன்னட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. தக் லைஃப் படத்தின் பேனர்களையும் அவர்கள் கிழித்துள்ளனர். மேலும், கன்னடம் தொடர்பான பேச்சுக்கு கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளன.
மேலும் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசியுள்ள சித்தராமையா, கன்னட மொழியின் நீண்ட வரலாறு பாவம் கமலுக்கு தெரியவில்லை என தெரிவித்துள்ளார்.
மன்னிப்பு கேட்க மாட்டேன்
இந்த நிலையில், தனது பேச்சுக்கு எப்போதும் மன்னிப்பு கேட்க மாட்டேன் என கேரளாவில் நடந்த நிகழ்ச்சியில் கமல்ஹாசன் விளக்கம் அளித்துள்ளார். மேலும், அன்பு எப்போதுமே மன்னிப்பு கேட்காது என்றும், நான் சொன்ன கருத்தை எனது பக்கம் இருந்து பார்த்தால் சரியாக தோன்றும், உங்கள் பக்கத்தில் இருந்து பார்த்தால் அது தவறாகத்தான் தோன்றும் எனவும் தெரிவித்துள்ளார்.
மொழி குறித்து அறிஞர்கள், வரலாற்று ஆய்வாளர்கள், தொல்லியல் துறையினர்தான் விவாதிக்க முடியும். மொழி குறித்த பேச்சை அரசியலாக்க வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார்.
LIVE 24 X 7









