நடிகர் ரஜினிகாந்த் தற்போது 'ஜெயிலர்-2' திரைப்படத்தின் இறுதிக்கட்டப் பணிகளில் பிஸியாக உள்ளார். இதனைத் தொடர்ந்து, கமல்ஹாசனின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் தனது 173-வது படத்தில் அவர் நடிக்கவுள்ளார். முதலில் இந்தப் படத்தை சுந்தர்.சி இயக்குவதாக இருந்தது; ஆனால் அவர் தேர்தலில் போட்டியிடுவதால் விலகியதையடுத்து, 'டான்' பட இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இந்தப் பொறுப்பை ஏற்றார். படத்தின் டீசர் மற்றும் இசை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது சிபி சக்ரவர்த்தி இப்படத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
சிபி சக்ரவர்த்திக்கு மாற்றாக, 'ஓ மை கடவுளே' மற்றும் 'டிராகன்' போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய அஷ்வத் மாரிமுத்து ரஜினி 173 படத்தை இயக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. கதைக்களத்தில் ஏற்பட்ட சில மாற்றங்கள் அல்லது தயாரிப்பு தரப்புடனான ஆலோசனைகளின் முடிவில் இந்த மாற்றம் நிகழ்ந்திருக்கலாம் எனத் தெரிகிறது. இளம் இயக்குநரான அஷ்வத் மாரிமுத்து, ரஜினியை எப்படிக் காட்டப்போகிறார் என்ற ஆர்வம் ஒருபுறம் இருந்தாலும், அடுத்தடுத்து இயக்குநர்கள் மாற்றப்படுவது ரசிகர்களிடையே ஒருவித குழப்பத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
LIVE 24 X 7









