மேலும் இந்த படத்தில் யோகிபாபு, தீபா சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். பாண்டிராஜ் - விஜய் சேதுபதி இணையும் முதல் படம் இதுவே என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இயக்குநர் பாண்டிராஜ் 'பசங்க', 'மெரினா', 'கேடி பில்லா கில்லாடி ரங்கா', 'கதகளி', 'கடைக்குட்டி சிங்கம்', நம்ம வீட்டுப் பிள்ளை' உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கியுள்ளார். இதனால் 'தலைவன் தலைவி' படம் வெற்றி அடையும் என ரசிகர்கள் கூறுகின்றனர். இந்த படம் காதல் மற்றும் குடும்ப கதைக்களத்தை கொண்டு உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் இந்த படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில, படத்தின் முதல் பாடலை படக்குழு நேற்று வெளியிட்டது. 'பொட்டல முட்டாயே...' என்று பாடலை சந்தோஷ் நாராயணனுடன் சுப்லாஷினியுடன் பாடியுள்ளார். மேலும் இப்பாடலுக்கு விவேக் வரிகள் எழுதியுள்ளார். இந்த பாடல் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
LIVE 24 X 7









