இந்த படத்தில் சத்யராஜ், காளி வெங்கட், ஷெல்லி, ரோஷினி ஹரிப்பிரியன், விஷ்வா ஜார்ஜ் மரியான், அர்ச்சனா சந்தூக், சுனில் சுகதா சாம்ஸ், கீதா கைலாசம் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர்.
இசையமைப்பாளர் கே.சி. பாலசரங்கன் இசையமைத்துள்ள இந்த படத்தில் 'என்னடா பொழப்பு இது' எனத்தொடங்கும் பாடலை நடிகர் வடிவேலு பாடியுள்ளார். இந்த பாடல் இணையத்தில் வைரலாகி ரசிகர்களை கவர்ந்தது.
இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் படக்குழுவினரை பாராட்டி பாராட்டினார். எதார்த்தமான கதைக்களத்தில் படம் அமைந்துள்ளதால் திரைப்படத்தை ரசிகர்கள் குடும்பத்துடன் பார்த்து மகிழ்ந்தனர்.
மேலும் படத்தில் காளி வெங்கட்டின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. அவர், ஆழமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தை பார்த்த இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ், படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டினார். இதற்கிடையே, பிரபல திரைப்பட விநியோகஸ்தரான திருப்பூர் சுப்ரமணியம் சமீபத்தில் வெளியான படங்களில் மெட்ராஸ் மேட்னி படம் நல்ல வசூலை தந்துள்ளதாக தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், ‘மெட்ராஸ் மேட்னி’ படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்து படக்குழு அறிவித்துள்ளது. இந்த படம் வரும் ஜூலை 4 ஆம் தேதி ‘டென்ட்கொட்டா’ ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற இந்த படம், ஓடிடி-யிலும் ரசிகர்களின் ஆதரவை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
LIVE 24 X 7









