இந்த படத்தில், பூஜா ஹெக்டே கதாநாயகியாகவும். பாபி டியோல் வில்லனாகவும் நடிக்கின்றனர். மேலும், நரேன், மமிதா பைஜூ, பிரியாமணி, பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தில் 'தளபதி வெற்றிக் கொண்டான் என்ற கதாபாத்திரத்தில் விஜய் நடிப்பதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பணிகள் சென்னையில் நடைபெற்றது. இந்நிலையில், கடந்த 9 மாதங்களாக நடைபெற்று வந்த 'ஜன நாயகன்' படத்தின் படப்பிடிப்பு பணிகள் நேற்றுடன் (ஜூன் 02) நிறைவடைந்ததாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. படப்பிடிப்பின் இறுதி நாளில், படக்குழுவினருக்கு அசைவ விருந்து பரிமாறப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
மேலும், இந்த படத்தின் டீசர் விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22-ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் படக்குழு வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது.
முழு நேர அரசியலில் விஜய்..
'ஜன நாயகன்' படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் விஜய் முழுநேர அரசியலில் ஈடுபட உள்ளார். மேலும் அவரது பிறந்தநாள் விழா வரும் ஜூன் 22-ம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. இந்த விழாவின் போது அடுத்தக்கட்ட அரசியல் அறிவிப்பை அவர் வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து முழுநேர அரசியலில் ஈடுபட உள்ள விஜய் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.
விஜய்யின் 'ஜன நாயகன்' படத்திற்கு சிக்கல்..
'தக் லைஃப்' பட விழாவில் கன்னட மொழி குறித்த நடிகர் கமலின் பேச்சு சர்ச்சையான நிலையில், கர்நாடகாவில் இப்படத்தை வெளியிட கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில், 'ஜன நாயகன்' படத்தை பெங்களூருவை சேர்ந்த KVN புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளதால் அதற்கு தமிழ்நாட்டில் தடை விதிக்க வேண்டும் என எக்ஸ் தளத்தில் பலரும் பதிவிட்டு வருகின்றனர். இதனால் விஜய்யின் கடைசி திரைப்படமான ஜனநாயகனுக்கு பெரும் சிக்கல் எழுந்துள்ளது.
LIVE 24 X 7









