இடையில் சில மாதங்கள் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுப் பின் மீண்டும் தொடங்கி, தற்போது சென்னையில் இரவு பகலாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனால் படம் வரும் 2027 பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் எனப் பரவலாக எதிர்பார்க்கப்பட்டது.
சென்னையில் நடைபெற்ற கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட நடிகர் சிலம்பரசன், ரசிகர்களின் இந்த எதிர்பார்ப்பு குறித்துப் பேசினார். அப்போது அவர், "அரசன் திரைப்படம் 2027-ஆம் ஆண்டு பொங்கலுக்குக் கண்டிப்பாக வரும் என்று பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், துரதிர்ஷ்டவசமாக பொங்கல் பண்டிகைக்குப் படம் வெளியாகாது. படத்தின் தரத்தில் எந்தவிதமான சமரசமும் செய்துகொள்ள நாங்கள் விரும்பவில்லை" எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், பொங்கல் ரிலீஸ் தள்ளியே போனாலும் படம் சிறப்பாக வரும் என்பதை உறுதிபடுத்தினார். "நீங்கள் அனைவரும் பெருமைப்படும் வகையில் 'அரசன்' திரைப்படம் ஒரு தரமான சம்பவமாக அமையும். மேலும், ரசிகர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் காத்திருக்கும் 'The World of Arasan' திரைப்படத்தின் பிரத்யேகக் க்ளிம்ப்ஸ் வீடியோ வரும் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டுத் திரையரங்குகளில் வெளியிடப்படும்" என்ற தகவலையும் சிம்பு பகிர்ந்து கொண்டார்.
LIVE 24 X 7









