பாதுகாப்பு ஏற்பாடுகளும் இயல்பு நிலையும்
கடந்த மூன்று நாட்களாகத் திருப்பரங்குன்றம் மலை மீது சென்று சாமி தரிசனம் செய்வதற்குப் பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்குக் காவல்துறையினர் அனுமதி மறுத்து வருகின்றனர். இந்தப் பதட்டமான சூழலைக் கட்டுப்படுத்த ஏற்கனவே ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் இருந்த நிலையில், நேற்று காலை கூடுதலாக 500-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். தற்போது 1,500-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போதைய நிலை
திருப்பரங்குன்றத்தில் கடந்த இரண்டு தினங்களாகப் பதட்டமான சூழல் நிலவி வந்த நிலையில், தற்போது அந்தப் பதட்டம் தணிந்து இயல்பு நிலைக்குத் திரும்பி உள்ளது. பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் நிம்மதியாகச் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். வழக்குகள் உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் இருப்பதால், மலைக்கு மட்டும் செல்வதற்குப் பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
LIVE 24 X 7









