மேஷம்:
தற்பெருமையத் தவிர்த்தா, தடைகள்' எல்லாம் தகரக் கூடிய காலகட்டம்க. பணியிடத்துல உங்க வாக்குக்கு செல்வாக்கு உயரும்க. அலுவலகத்துல கூடுதல் பொறுப்பு தரப்பட்டாலும் அது உங்க திறமையைப் பரிசோதிக்கறதுக்காகவே இருக்கும்க. உணர்ந்து செயல்பட்டா உயர்வுகள் வந்து சேரும்க. இல்லத்துல இனிமை நிலவும்க அதை வாழ்க்கைத் துணையுடன் வாக்குவாதம் தவிருங்க. வீடு, வாகனம் புதுப்பிக்க வாங்க சந்தர்ப்பம் வரும்க. ஆடை, ஆபரணம் சேரும்க. புதிய அறிமுகங்களிடம் அதிக நெருக்கம் தவிருங்க. செய்யும் தொழில்ல நேரடி கவனம் செலுத்துங்க. அந்நிய தேச வர்த்தகத்துல தஸ்தாவேஜுகளை பத்திரமா வையுங்க. அரசு, அரசியல்ல வீண்பழி வரலாம் கவனமா இருங்க. வாகனத்துல செல்லும்போது லாகிரி வேண்டாம்க. வயிறு, முதுகு, கண் உபாதைகள் வரலாம்க. அனுமனைக் கும்பிடுங்க. ஆனந்தம் நிறையும்.
ரிஷபம்:
திட்டமிட்டும் நேரம் தவறாமலும் செயல்பட்டா, நன்மைகள் அதிகரிக்கத் தொடங்கும்க. பணியிடத்துல எதிர்பார்த்த ஏற்றங்கள் கைகூடும்க. சிலருக்கு பதவி உயர்வும் அதனால் பெருமைகளும் சேரும்க. வீட்டுல விசேஷங்கள் வரத்தொடங்கும்க. மனம் விட்டுப் பேசினா, நல்லவை தொடரும்க. வரவு அதிகரிக்கும்க. சேமிப்பை உயர்த்திக்குங்க. அரசு, அரசியல் சார்ந்தவங்களுக்கு வாக்குல கவனம் வேணும்க. கலை, படைப்புத் துறையினருக்கு வாய்ப்புகள் வரத்தொடங்கும்க. செய்யும் தொழில்ல சீரான லாபம் தொடரும்க. ஒப்பந்தங்களை நேரடியா கவனியுங்க. பயணத்துல உடைமைகள் பத்திரம்க.. தினமும் சிறிது நேரமாவது உடற்பயிற்சி செய்யறது நல்லதுங்க. எலும்பு தேய்மானம், அஜீரணம், தூக்கமின்மை வரலாம்க. மகாலக்ஷ்மியை வணங்குங்க. மகிழ்ச்சி நிறையும்.
மிதுனம்:
வாக்குல கவனமா இருக்க வேண்டிய காலகட்டம்க. பணியிடத்துல துணிவைவிட பணிவுதான் நல்லதுங்க. பொறுப்புச் சுமை அதிகரித்தாலும் புலம்பல் கூடாதுங்க. எதிர்பாரா இடமாற்றம் வந்தால் ஏற்றுக்குங்க. குடும்பத்துல வாக்குவாதம் வேண்டாம்க. வாழ்க்கைத் துணையுடன் அன்யோன்யம் அதிகரிக்கும்க. பெரியவங்க உடல்நலத்துல கவனம் செலுத்துங்க. வாரிசுகளால் பெருமை சேரும்க. செய்யும் தொழில்ல சட்டப்புறம்பின் நிழல்கூட படாம பார்த்துக்குங்க. அரசு, அரசியல் துறையினர், பிறருக்கு ஜாமீன் தருவதைத் தவிருங்க. கலை, படைப்புத் துறையினர் ரகசியம் காத்திடுங்க. இருட்டில் தனியே செல்வதை தவிருங்க. அல்சர், அலர்ஜி, கழிவுறுப்பு உபாதை வரலாம்க. ரங்கநாதரை வணங்குங்க. வாழ்க்கை ரம்மியமாகும்.
கடகம்:
முயற்சிகள் பலனளிக்கும் காலகட்டம்க. பணியிடத்துல மாற்றமும் ஏற்றமும் வரும்க. மேலதிகாரிகளால் உங்க திறமை உணரப்படும்க. பூர்வீக சொத்து சேரும்க. சுபகாரியத் தடைகள் விலகும்க. குடும்பத்துல வார்த்தைகள்ல நிதானம் முக்கியம்க. வரவை சேமிக்கப் பழகுவது நல்லதுங்க. ஆடை, ஆபரணம் சேரும்க. செய்யும் தொழில்ல முழுமையான முயற்சிகள் அவசியம்க. சட்டப்புறம்பு கனவிலும் எட்டிப் பார்க்காம பார்த்துக்குங்க. அரசு, அரசியல் சார்ந்தங்க, வழக்குகள்ல நேரடி கவனம் செலுத்துங்க. கலை, படைப்புத் துறையினர் நிதானத்தைக் கடைப்பிடியுங்க. வாகனப் பயணத்துல வேகம் வேண்டாம்க. ஒற்றைத் தலைவலி, பற்களில் உபாதை வரலாம்க. முருகனை வணங்குங்க. முன்னேற்றம் உறுதியாகும்.
சிம்மம்:
பொறுப்பு உணர்வுடன் பொறுமையாகச் செயல்படவேண்டிய காலகட்டம்க. அலுவலகத்துல அவசரமும் அலட்சியமும் கூடாதுங்க. பிறரை நம்பி ரகசியங்களைப் பகிர வேண்டாம்க. கோப்புகளை பத்திரமா வைச்சுக்குங்க. இல்லத்துல இன்சொல் முக்கியம்க. மூன்றாம் நபர் தலையீட்டைத் தவிருங்க. வாரிசுகளிடம் கடுமை வேண்டாம்க. குடும்ப விஷயங்களைப் பொது இடத்துல பேசறது கூடாதுங்க. பணவரவை சேமிக்கப் பழகுங்க. செய்யும் தொழில்ல சோம்பலைத் தவிருங்க. அரசியல், அரசு சார்ந்தவங்க புறம்பேசுவோரை விலக்குங்க. அமைதியாக செயல்படுங்க. கலை, படைப்புத் துறையினர் தலைகனத்தை இறக்கிட்டு செயல்படுங்க. பயணப்பாதையில உடைமைகள் பத்திரம்க. காது, மூக்கு, தொண்டை, கழிவு உறுப்பு உபாதைகள் வரலாம்க. பெருமாள்தாயாரை வணங்குங்க. பெருமைகள் நிலைக்கும்.
கன்னி:
தன்னம்பிக்கையோட செயல்பட்டா, உயர்வுகள் வரும் உன்னதமான காலகட்டம்க. அலுவலகத்துல உங்க திறமைகள் பளிச்சிடும்க. பிறரால் ஏற்றிருந்த பழி மாறும்க. குடும்பத்துல குதூகல சூழல் உருவாகும்க. தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடும்க. அசையும், அசையா சொத்து சேரும்க. ரத்தபந்த உறவுகளால் ஆதாயம் ஏற்படும்க. செய்யும் தொழில்ல ஏற்றம் ஏற்படும்க. பெரிய மனிதர்கள் ஆதரவு கிடைக்கும்க. அரசு, அரசியல் சார்ந்தவங்களுக்கு நிலையான முன்னேற்றம் உருவாகும்க. மேலிடத்து பாராட்டு மகிழ்ச்சி தரும்க. கலை, படைப்புத் துறையினருக்கு அந்தஸ்து உயரும்க. அடிவயிறு, மூட்டு உபாதைகள் வரலாம்க. பயணத்துல இடைவழி உணவைத் தவிருங்க. சிவபார்வதியை வணங்குங்க. சிறப்புகள் சேரும்.
துலாம்:
சினமும் சீற்றமும் தவிர்த்தால் சிறப்புகள் சேரக்கூடிய காலகட்டம்க. பணியிடத்துல மேலதிகாரிகள் ஆதரவு கிட்டும்க. எதிர்பார்த்த உயர்வுகள் கைகூடும்க உடனிருக்கும் யாரிடமும் வீண்ஜம்பமும் வெட்டிக் கோபமும் காட்ட வேண்டாம்க. குடும்பத்துல அன்யோன்யம் அதிகரிக்கும்க. வாரிசுகளிடம் கடுமை வேண்டாம்க. உங்க உடல்நலத்துல கூடுதல் கவனம் செலுத்துங்க. வளர்ப்புப் பிராணிகளிடம் விலகி இருங்க. கொடுக்கல் வாங்கலை உடனுக்குடன் குறிச்சு வையுங்க. செய்யும் தொழில்ல சீரான வளர்ச்சி உண்டுங்க. கூட்டுத் தொழில்ல கவனமா இருங்க, அரசு, அரசியல் துறையினருக்கு எதிர்பாராத நற்செய்தி கிட்டும்க. கலை, படைப்புத் துறையினருக்கு அரசுவழி கௌரவம் கிடைக்கும்க. இரவுப் பயணம் இயன்றவரை தவிருங்க. எலும்பு, மூட்டு, பற்கள், உபாதைகள் வரலாம்க. ஆறுமுகனை ஆராதியுங்க. அல்லல் எல்லாம் தீரும்.
விருச்சிகம்:
எண்ணம்போல ஏற்றம் 22 வரக்கூடிய காலகட்டம்க. அலுவலகத்துல உங்க திறமை பேசப்படும்க. எதிர்பார்த்த பதவி, ஊதிய உயர்வுகள் கைகூடும்க. சிலருக்கு பணிசார்ந்த அயல்நாட்டுப் பயண வாய்ப்பு வரலாம்க. குடும்பத்துல நிம்மதி நிலவும்க. உங்க வார்த்தைகள்ல இனிமை இருந்தா அது நிலைக்கும்க. வாழ்க்கைத் துணையுடன் விலகி இருந்த நிலை மாறும்க. இளம் வயதினர் பெற்றோர், பெரியோருடன் மனம்விட்டுப் பேசுங்க. சுபகாரியங்கள சுய முடிவைத் தவிருங்க. பணவரவை சேமிக்கப் பழகுங்க. அரசு, அரசியல் துறையினருக்கு பெருமை, புகழ் சேரும்க. கலைஞர்கள், படைப்பாளிகளுக்கு திறமைக்கு உரிய வாய்ப்பு கிட்டும்க. அயல்நாட்டு வர்த்தகத்துல வளர்ச்சி ஏற்படும்க. ரியல் எஸ்டேட் தொழில் செழிக்கும்க. பயணத்தால் ஆதாயம் கிட்டும்க. தலைவலி, வயிறு உபாதை, பூச்சி தொல்லை வரலாம்க. துர்க்கையைத் துதியுங்க.வாழ்க்கை செழிக்கும்.
தனுசு:
தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கக் கூடிய காலகட்டம்க. அலுவலகத்து அல்லல்கள் படிப்படியா விலகும்க. திறமைக்கு உரிய பாராட்டு நிச்சயம் கிட்டும்க. வீட்டுல விசேஷங்கள் வரத் தொடங்கும்க. வாக்குல இனிமை இருந்தா வாழ்க்கையும் இனிக்கும்க. குடும்பத்துப் பெரியவங்க உடல்நலத்துல கவனம் செலுத்துங்க. ஆடை, ஆபரண சொத்து சேரும்க. குலதெய்வத்தை தினமும் கும்பிடுங்க. செய்யும் தொழில்ல லாபம் சீராகும்க. அரசு, அரசியல் சார்ந்தவங்களுக்கு ஆதரவு அதிகரிக்கும்க. தரல் பெறலை மட்டும் முறைப் படுத்தறது அவசியம்க. வாகனப் பழுதை உடனுக்குடன் சரிசெய்யுங்க. தூக்கமின்மை, அஜீரணம், நரம்பு, வயிறு உபாதைகள்ல கவனமா இருங்க. நரசிம்மரை வணங்குங்க. நல்லவை நடக்கும்.
மகரம்:
மனசுல இதுவரை இருந்த இனம்புரியாத பயம் விலகும்க. நிலையான பாதையும் நிம்மதியான சூழலும் ஏற்படக்கூடிய காலகட்டம்க. அதே சமயம் பணியிடத்துல பொறுமையும் பொறுப்பு உணர்வும் அவசியம்க. பதவி, இடமாற்றங்களை இன்முகத்தோடு ஏற்றுக்கறது நல்லதுங்க. பொறுப்புகளில் மூன்றாம் நபர் தலையீட்டை அனுமதிக்க வேண்டாம்க. இல்லத்துல இனிய வார்த்தைகள் பேசுங்க. வாரிசுகள்கிட்டே வீண் கோபம் வேண்டாம்க. வரவு அதிகரிக்கும்க. அதை சுப செலவாகவோ, சொத்தாகவோ சேமிக்கறதுதான் நல்லதுங்க. அரசு, அரசியல் சார்ந்தவங்களுக்கு ஆதரவு அதிகரிக்கும்க. செய்யும் தொழில் செழிப்பாகும்க. தேவையற்ற புதிய முதலீடு வேண்டாம்க. வாகனத்துல நிதானத்தைக் கடைபிடியுங்க. அலர்ஜி,அடிவயிறு, உபாதைகளை உடனே கவனியுங்க. இஷ்ட மகானை வணங்குங்க. வாழ்க்கை மணக்கும்.
கும்பம்:
சிந்தனையை சிதறவிடாம இருக்க வேண்டிய காலகட்டம்க. அலுவலகத்துல எதிலும் நேரடி கவனமும் நிதானமும் அவசியம்க. யாருக்கும் ஆலோசனை சொல்றதை தவிர்க்கணும்க. குடும்பத்துல சீரான அமைதி நிலவும்க. வாழ்க்கைத் துணையுடன் வாக்குவாதம் வேண்டாம்க. பெரியோர் வாக்குக்கு முக்கியத்துவம் குடுங்க. வாரிசுகளால் பெருமை சேரும்க. அரசு, அரசியல் துறையினருக்கு நிதானம் முக்கியம்க. செய்யும் தொழில்ல நேரடி கவனம் அவசியம்க. புதிய முதலீடுகள்ல அவசரம் வேண்டாம்க. கலை, படைப்புத் துறையினருக்கு அரசுவழி பாராட்டு கிட்டும்க. பயணத்தில் உடைமைகள் பத்திரம்க. கண்கள், எலும்பு, மூட்டு உபாதைகள் வரலாம்க. கணபதியை வணங்குங்க. களிப்பு நிறையும்.
மீனம்:
அவசரமும் அலட்சியமும் தவிர்க்க வேண்டிய காலகட்டம்க. பணியிடத்துல கவனச் சிதறல் கூடாதுங்க. பிறரோட விஷயங்கள்ல தலையிடுவதை தவிருங்க. புறம் பேசுவது, கேட்பது கூடாதுங்க. மேலதிகாரிகளிடம் வாக்குவாதம் வேண்டாம்க. குடும்பத்துல குதர்க்கம் தவிர்த்தால் குழப்பம் மறையும்க. சுபகாரியத் தடைகள், குலதெய்வ வழிபாட்டால் நீங்கும்க. கடன்களை நேரடியாக பைசல் செய்யுங்க. பூமியால் ஆதாயம் உண்டுங்க. செய்யும் தொழில்ல முதலீட்டை திட்டமிட்டு செய்யுங்க. அரசுக்கு உரிய கட்டணைத்தை தவறாம செலுத்துங்க. அரசு, அரசியல் சார்ந்தவங்க மேலிடத்தின் அனுமதி பெறாத செயல்களை தவிருங்க. வாகனப் பழுதை உடனுக்குடன் கவனியுங்க. அலர்ஜி, படபடப்பு, ஜீரண உபாதைகள் வரலாம்க. ஈஸ்வரனைக் கும்பிடுங்க. எண்ணங்கள் ஈடேறும்.
LIVE 24 X 7









