ஆன்மிகம்

தொழில், நிதி மற்றும் ஆரோக்கியம்.. இன்றைய ராசிபலன் (செப்.10)

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய 12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள்..

தொழில், நிதி மற்றும் ஆரோக்கியம்.. இன்றைய ராசிபலன் (செப்.10)
RasiPalan
மேஷம்

நிலுவையில் இருந்த பணிகள் இன்று நிறைவடையும். பணியிடத்திலும் வியாபாரத்திலும் மேலதிகாரிகள் மற்றும் வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கும். பணவரவில் முன்னேற்றம் காணப்படும். குடும்பத்தில் உங்கள் ஆலோசனைக்கு மதிப்பிருக்கும். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவது நல்ல பலனைத் தரும்.

ரிஷபம்

இன்று பொறுமையும் தெளிவும் கூடும் நாளாக இருக்கும். அலுவலகத்தில் முக்கிய ஆவணங்களைக் கையாளுவதில் கவனம் தேவை. தொழிலில் பழைய வாடிக்கையாளர்கள் மூலம் ஆதாயம் உண்டு. வீண் செலவுகள் குறையும். குடும்பத்திலும் நண்பர்கள் வட்டாரத்திலும் சாதகமான சூழல் நிலவும்.

மிதுனம்

திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் அமையும். மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும் என்றாலும், தொழில் ரீதியான முடிவுகளில் நிதானம் அவசியம். வரவுக்கு ஏற்ற செலவுகளும் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், மாணவர்களுக்குப் படிப்பில் நல்ல முன்னேற்றமும் காணப்படும்.

கடகம்

தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள். பணியிடத்தில் அனுபவத்தின் மூலம் சிக்கல்களைக் கையாளுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் நம்பிக்கை வலுப்படும். பணவரவு சீராக இருந்தாலும் செலவுகள் கூடும். குடும்பத்தில் அமைதியும் அன்பும் நிலவும்.

சிம்மம்

செயல்பாடுகள் மற்றவர்களின் கவனத்தை ஈர்க்கும். நிலுவையில் இருந்த முயற்சிகளுக்குச் சாதகமான பதில் கிடைக்கும். பணப்புழக்கம் சீராக இருக்கும். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் குறித்த பேச்சுகள் எழும். மாணவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்துவதில் ஆர்வம் காட்டுவார்கள்.

கன்னி

பேச்சில் தெளிவு இருக்கும். அனுபவஸ்தர்களின் ஆலோசனைகள் அலுவலகப் பணிகளுக்கு உதவும். வியாபாரத்தில் கணக்கு வழக்குகளைச் சரியாகப் பராமரிப்பது அவசியம். குடும்பத்தில் சகோதர வழியில் நல்ல தகவல் கிடைக்கும். திட்டமிட்டுப் படிக்கும் மாணவர்களுக்கு எதிர்பார்த்த முடிவு கிடைக்கும்.

துலாம்

சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் பணிகள் எளிதாகும். தொழிலில் புதிய தொடர்புகளும், வியாபாரத்தில் வருமான உயர்வும் காணப்படும். சேமிப்பிற்கான திட்டங்களை வகுப்பீர்கள். குடும்பத்திலும் நண்பர்கள் மத்தியிலும் மகிழ்ச்சியான சூழல் நிலவும்.

விருச்சிகம்

சிக்கலான காரியங்களுக்கும் தீர்வு கிடைக்கும். முடிவெடுக்கும் திறன் அதிகரிக்கும். தொழிலில் புதிய திட்டங்கள் உருவாகும். பழைய கடன்களை அடைப்பது குறித்த யோசனைகள் எழும். தம்பதியரிடையே நெருக்கம் அதிகரித்து எதிர்காலத் திட்டங்கள் குறித்து ஆலோசிப்பீர்கள்.

தனுசு

அவசர முடிவுகளைத் தவிர்ப்பது நல்லது. முக்கிய ஆவணங்களைச் சரிபார்ப்பதும், அதிகாரிகளிடம் பேசும்போது கவனமாக இருப்பதும் அவசியம். நிதி வரவில் தாமதம் ஏற்படலாம் என்பதால் செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டும். பயணங்களிலும் பேச்சிலும் பொறுமை தேவை.

மகரம்

சந்திராஷ்டமம் இருப்பதால் முக்கிய முடிவுகளைத் தள்ளி வைப்பது நல்லது. பணியிடத்தில் வீண் விவாதங்களைத் தவிர்க்கவும். நிதி சார்ந்த விஷயங்களிலும் அவசர முதலீடுகளிலும் கவனம் தேவை. மூத்தவர்களின் ஆலோசனையைக் கேட்டு நடப்பது அமைதியைத் தரும்.

கும்பம்

புதிய சிந்தனைகள் வெற்றியைத் தரும். தொழில் நுட்பம் சார்ந்த புதிய பொறுப்புகள் கிடைக்கலாம். தொழிலில் எதிர்பார்த்த நல்ல செய்திகள் வந்து சேரும். பணவரவு மேம்படும். குடும்பத்தினரின் ஆதரவோடும் நண்பர்களின் உதவியோடும் மகிழ்ச்சி கூடும்.

மீனம்

பழைய முயற்சிகளுக்கு உரிய பலன்கள் கிடைக்கும். பணித்துறையில் பொறுப்புணர்வு பாராட்டப்படும். தொழில் ரீதியாக நிலுவையில் இருந்த தொகைகள் வசூலாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும்; புதிய விஷயங்களைக் கற்பதில் மாணவர்கள் ஆர்வம் காட்டுவார்கள்.