ஆன்மிகம்

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும் நாள்; இன்றைய ராசி பலன் (செப்.7)

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய 12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள்..

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும் நாள்; இன்றைய ராசி பலன் (செப்.7)
Rasi Palan
மேஷம்

மேஷ ராசியினருக்கு இன்று நினைத்த காரியங்கள் முடிவதில் சற்று இழுபறி நிலை நீடிக்கும். ஒருசிலருக்கு எதிர்பார்த்த பண வரவு கிடைப்பதில் தாமதம் ஏற்படக்கூடும். இருப்பினும், நண்பர்கள் மூலம் மனதிற்கு மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். குடும்பத்தில் தாயாரின் உடல்நலத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. மேலும், வீட்டின் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. வியாபாரத்தைப் பொறுத்தவரை விற்பனை வழக்கமான அளவில் சீராக இருக்கும். முக்கிய முடிவுகள் எதையும் அவசரப்படாமல் நிதானமாக எடுப்பது நல்லது.

ரிஷபம்

ரிஷப ராசியினருக்குக் கணவன் - மனைவி இடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி, குடும்பத்தில் அமைதி திரும்பும். தந்த வழியில் உள்ள உறவினர்களால் சில தேவையில்லாதப் பிரச்சினைகள் எழக்கூடும் என்றாலும், அதனால் பெரிய பாதிப்புகள் எதுவும் இருக்காது. தாயாரின் தேவைகளைப் பூர்த்தி செய்யச் சற்றே கூடுதல் செலவும் அலைச்சலும் ஏற்படும். தொழிலில் எதிர்பார்ப்பை விடக் கூடுதலான லாபம் கிடைத்து மகிழ்ச்சி அளிக்கும்.

மிதுனம்

மிதுன ராசியினருக்குத் தந்தையின் வழியில் எதிர்பார்த்த நிதி உதவி கிடைக்கும். அரசு வழியிலும் சாதகமான சூழல் நிலவும். சகோதரர்களால் சில செலவுகள் ஏற்பட்டாலும், அவை மனதிற்கு மகிழ்ச்சி தரும் செலவுகளாகவே அமையும். பிற்பகலுக்கு மேல் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. அண்டை வீட்டாரிடம் விட்டுக்கொடுத்து நடப்பது அமைதிக்கு வழிவகுக்கும். வியாபாரத்தில் வழக்கமான விற்பனை நீடிக்கும்.

கடகம்

கடக ராசியினர் இன்று வழக்கமான பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. எதிர்பார்த்திராத செலவுகள் குறுக்கிடுவதால், அதைச் சமாளிக்கக் கடன் வாங்க வேண்டிய சூழல் ஏற்படலாம். ஆரோக்கியத்தில் தனிக் கவனம் தேவை. தந்தையுடன் தேவையில்லாத மனஸ்தாபங்கள் வரக்கூடும் என்பதால், பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது அவசியம். வியாபாரத்தில் விற்பனை சுமாரான அளவிலேயே இருக்கும்.

சிம்மம்

சிம்ம ராசியினருக்குப் பண வரவு போதுமானதாக இருந்தாலும், அதற்கேற்ற தேவையற்ற செலவுகளும் வரிசைகட்டி நிற்கும். தாயாருடன் இருந்த மனக்கசப்புகள் விலகி, அவர் மூலம் பொருளாதார உதவிகள் கிடைக்க வாய்ப்புள்ளது. பிற்பகலுக்கு மேல் உறவினர்கள் வழியில் சில சங்கடங்கள் தோன்றினாலும், பெரிய பாதிப்பு இருக்காது. வியாபாரம் வழக்கம் போல நடைபெறும். தொழில் சார்ந்த பணியாளர்களால் கூடுதல் செலவுகள் வரக்கூடும்.

கன்னி

கன்னி ராசியினருக்கு இன்று எடுக்கும் காரியங்களில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சீராகி மன உற்சாகம் கூடும். முக்கிய முடிவுகளைத் தைரியமாக எடுப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். உங்கள் முயற்சிகளுக்கு வாழ்க்கைத்துணையின் முழு ஆதரவும் கிடைக்கும். பிற்பகலுக்குப் பிறகு திடீர் பணவரவுக்கு வாய்ப்புள்ளது. வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் திருப்திகரமாக இருக்கும்.

துலாம்

துலாம் ராசியினர் இன்று முக்கியமான முடிவுகள் எடுப்பதைத் தள்ளிப்போடுவது நல்லது. தேவையில்லாத அலைச்சல்களைக் தவிர்ப்பதுடன், உணவுப் பழக்கத்திலும் கவனமாக இருக்க வேண்டும். பிள்ளைகளின் தேவைகளுக்காகச் செலவு செய்ய வேண்டி வரும். குடும்பப் பொறுப்புகளை நிறைவேற்றுவதில் சிறுசிறு தடைகள் தோன்றினாலும் அவை தற்காலிகமானதே. உறவினர்களிடம் பேசும்போது பொறுமையைக் கையாள வேண்டும். வியாபாரத்தில் பணியாளர்களால் சிறு செலவுகள் ஏற்படும்.

விருச்சிகம்

விருச்சிக ராசியினருக்கு எதிர்பார்த்த பணிகள் நிறைவேறுவதில் சற்று தாமதம் ஏற்பட்டாலும், இறுதியில் சாதகமாகவே முடியும். கணவன் - மனைவி இடையே அன்பும் அந்நியோன்யமும் அதிகரிக்கும். பிள்ளைகளின் ஆசைகளை நிறைவேற்றச் சற்று அலைச்சல் இருக்கும். மூன்றாம் நபர்களின் தலையீட்டால் குடும்பத்தில் சில குழப்பங்கள் தோன்றக்கூடும் என்பதால் கவனமாக இருப்பது நல்லது. வியாபாரத்தில் விற்பனை மிதமான அளவிலேயே இருக்கும்.

தனுசு

தனுசு ராசியினர் பிற்பகலுக்குப் பின் அனைத்து விஷயங்களிலும் எச்சரிக்கையுடனும் பொறுமையுடனும் இருக்க வேண்டும். கணவன் - மனைவி இருவரும் பரஸ்பரம் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. பணத்தைச் செலவிடும் முன் அது அவசியமான செலவா என்பதை யோசித்துச் செயல்பட வேண்டும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்கள் தோன்றும் என்பதால், கனிவான அணுகுமுறை அவசியம்.

மகரம்

மகர ராசியினருக்கு இன்று எதிர்பாராத தனவரவு உண்டாகும். நிலுவையில் இருந்த கடன்கள் வசூலாகும். பிள்ளைகளின் செயல்பாடுகள் மனதிற்குப் பெருமை சேர்க்கும். வாழ்க்கைத்துணை வழியில் ஆதாயம் கிடைக்கும். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவுகளை இன்று தள்ளிவைப்பது நல்லது. வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும். பணியாளர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும்.

கும்பம்

கும்ப ராசியினருக்குப் புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றி தரும். கணவன் - மனைவி இடையே புரிந்துணர்வு அதிகரிக்கும். எதிர்பார்த்த பணவரவு தடையின்றி கைக்கு வந்து சேரும். பிள்ளைகளின் பிடிவாதப் போக்கு மாறி இணக்கமாக நடப்பார்கள். உறவினர்கள் வழியில் நல்ல செய்திகள் கிடைக்கும். சகோதரர்கள் கேட்கும் உதவிகளைச் சலிப்பின்றி செய்து தருவார்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கணிசமாக அதிகரிக்கும்.

மீனம்

மீன ராசியினருக்குச் சகோதரர்கள் மூலம் எதிர்பார்க்கும் காரியங்கள் சற்று இழுபறியாக முடிவடையும். இருப்பினும், தினசரி செலவுகளைச் சமாளிப்பதில் பெரிய சிரமம் இருக்காது. தந்தையின் ஆரோக்கியம் சீரடையும். பிள்ளைகளால் தோன்றும் சிறுசிறு சிக்கல்கள் வந்து நீங்கும். அரசு வழியில் நிலுவையில் இருந்த காரியங்கள் சாதகமாக முடியும். வியாபாரம் வழக்கம்போல நடைபெறும், பணியாளர்களின் ஒத்துழைப்பும் சிறப்பாக இருக்கும்.