Vijayakanth: “வாழ்ந்தார் மக்களுக்காக வாழ்ந்தார்.” கோயில் போல வடிவமைக்கப்பட்ட விஜயகாந்த் நினைவிடம்!

மறைந்த கேப்டன் விஜயகாந்தின் நினைவிடம் கோயில் போல வடிவமைக்கப்பட்டுள்ளது, ரசிகர்களிடமும் தேமுதிக தொண்டர்களிடமும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Aug 9, 2024 - 22:01
Aug 9, 2024 - 22:02
 0
Vijayakanth: “வாழ்ந்தார் மக்களுக்காக வாழ்ந்தார்.” கோயில் போல வடிவமைக்கப்பட்ட விஜயகாந்த் நினைவிடம்!
கேப்டன் விஜயகாந்த் நினைவிடம்

.சென்னை: தமிழ் சினிமாவில் உச்ச நட்ச்சத்திரமாக வலம் வந்தவர் கேப்டன் விஜயகாந்த். 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள விஜயகாந்துக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். சினிமாவை தொடர்ந்து அரசியலிலும் தடம் பதித்த அவர், அங்கும் தனி முத்திரை பதித்தார். தேமுதிக என்ற அரசியல் கட்சியை தொடங்கி தேர்தலில் வெற்றிப் பெற்ற விஜயகாந்த், சட்டமன்றத்திலும் அதிரடியாக பேசி ஸ்கோர் செய்தார். சினிமா, அரசியல் என இந்த இரண்டையும் கடந்து, மக்களுக்கு உதவிகள் செய்வதிலும், பசியோடு செல்பவர்களுக்கு உணவு வழங்குவதிலும் கேப்டன் விஜயகாந்த் ஒரு வள்ளலாகவே வாழ்ந்தார்.

இதுபற்றி விஜயகாந்திடம் உதவிப் பெற்று பயனடைந்தவர்கள் பலரும் வெளிப்படையாகவே பேசியுள்ளனர். இந்நிலையில், கேப்டன் விஜயகாந்த் கடந்தாண்டு டிசம்பர் 28ம் தேதி உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். இதனையடுத்து அவரது இறுதி ஊர்வலத்தில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர். சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் கேப்டன் விஜயகாந்தின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. அன்று முதல் விஜயகாந்த் நினைவாக தேமுதிக அலுவலகத்தில் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.

தினமும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் இந்த அன்னதானம் மூலம் பயன்பெற்று வருகின்றனர். இதுதவிர நாள்தோறும் ஏராளமானோர் கேப்டன் விஜயகாந்தின் சமாதிக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், கேப்டன் விஜயகாந்தின் நினைவிடத்தில், அஞ்சலி செலுத்த செல்லும் பொதுமக்களின் வசதிக்காக மேற்கூரைகள் அமைக்கப்பட்டு சில மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன. இதனால் விஜயகாந்த் நினைவிடம் தற்போது கிட்டத்தட்ட ஒரு கோயிலை போல காட்சித் தருவதாக பலரும் கூறி வருகின்றனர். 

மேலும் படிக்க - அரசுக்கும் காவல்துறைக்கும் பயம்..” பா ரஞ்சித் அதிரடி!

மேலும், விஜயகாந்தின் சமாதியின் பக்கவாட்டில் ”இயன்றதை செய்வோம் இல்லாதவர்க்கே...” எனவும், சமாதியின் முன்பு “வாழ்ந்தார் வாழ்ந்தார் மக்களுக்காக வாழ்ந்தார் பத்மபூஷன் புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த்” என பொறிக்கப்பட்ட கல்வெட்டும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வாசகத்தை பார்த்த பொதுமக்கள், கண்ணீர் சிந்தியபடி கேப்டனுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு சில மணி நேரங்கள் அங்கு அமர்ந்துவிட்டு வீடு திரும்புகின்றனர்.  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow