Indian 3: ரசிகர்களை ஏமாற்றிய கமல் – ஷங்கர் கூட்டணி... நேரடியாக ஓடிடியில் வெளியாகும் இந்தியன் 3..?

கமல், ஷங்கர் கூட்டணியில் உருவாகியுள்ள இந்தியன் 3 படம் தியேட்டரில் ரிலீஸாக வாய்ப்பில்லை என தகவல்கள் வெளியாகி வருகின்றன.

Oct 3, 2024 - 23:44
 0
Indian 3: ரசிகர்களை ஏமாற்றிய கமல் – ஷங்கர் கூட்டணி... நேரடியாக ஓடிடியில் வெளியாகும் இந்தியன் 3..?
நேரடியாக ஓடிடியில் வெளியாகும் இந்தியன் 3

சென்னை: கமல் நடிப்பில் கடந்த ஜூலை 12ம் தேதி வெளியான இந்தியன் 2 திரைப்படம் மிகப் பெரிய தோல்வியடைந்தது. பிரம்மாண்ட இயக்குநர் என பெயர் வாங்கிய ஷங்கர், இந்தியன் 2ம் பாகத்துக்காக மீண்டும் கமலுடன் இணைந்தார். படப்பிடிப்பின் போது பல தடைகளையும் சிக்கல்களையும் சந்தித்த இந்தியன் 2, சுமார் 5 ஆண்டுகளுக்குப் பின்னர் தான் திரையரங்குகளில் வெளியானது. இதனால் இந்தியன் 2 படத்துக்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது, ஆனால் அதையெல்லாம் பொய்யாக்கிய ஷங்கர், ரசிகர்களை ரொம்பவே சோதித்துவிட்டார். 

கதை, திரைக்கதை, மேக்கிங் என ஒட்டுமொத்தமாக இந்தியன் 2 படத்தை சொதப்பிய ஷங்கரை நெட்டிசன்கள் பங்கமாக ட்ரோல் செய்திருந்தனர். அதுமட்டுமா! அனிருத்தின் பின்னணி இசை, பாடல்களும் நெட்டிசன்களால் ரொம்பவே ட்ரோல் செய்யப்பட்டது. இன்னொரு பக்கம் கமலின் இந்தியன் தாத்தா கேரக்டரையும் கெட்டப்பையும் ரசிகர்கள் வச்சி செய்தனர். இதனால் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் இந்தியன் 2 படத்திற்கு பெரிய அடி விழுந்தது. இதனிடையே இந்தியன் 2ம் பாகத்திற்கான படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட ஃபுட்டேஜ் அதிகம் இருந்ததால், இந்தப் படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட முடிவு செய்தார். 

ஆனால், இந்தியன் 2ம் பாகத்துக்கு ரசிகர்களிடம் வரவேற்பு இல்லாததால், 3ம் பாகத்தை திரையரங்குகளில் வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்தியன் 3ம் பாகம் நேரடியாக ஓடிடியில் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும், விரைவில் இதுகுறித்து அறிவிப்பு வெளியாகும் என்றும் சொல்லப்படுகிறது. அதேநேரம் இந்தியன் 3 ஓடிடி ரைட்ஸ் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் குறைந்த விலைக்கு வாங்க பேரம் பேசி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விக்ரம் படம் மூலம் கம்பேக் கொடுத்த கமல், இந்தியன் 2 படத்தால் மிகப் பெரிய சரிவை சந்தித்துள்ளார். இதற்கெல்லாம் இந்தியன் 3 நல்ல திருப்புமுனையாக இருக்கும் என கமல்ஹாசனும் படக்குழுவும் நம்பிக்கையுடன் காத்திருந்தது. ஆனால், இந்தியன் 3 நேரடியாக ஓடிடியில் வெளியாக வாய்ப்புள்ளதாக செய்திகள் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது. இந்தியன் 2 படத்தின் க்ளைமேக்ஸ்க்குப் பின்னர் இந்தியன் 3 ட்ரெய்லரை இணைத்திருந்தார் ஷங்கர். இந்த ட்ரெய்லர் வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில், தற்போது தியேட்டர் ரிலீஸில் இருந்து இந்தியன் 3 பின்வாங்கவுள்ளது ரசிகர்களிடம் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. ஒருவேளை இந்தியன் 3 நேரடியாக ஓடிடியில் வெளியாகும் என்றால், அது அடுத்தாண்டு ஜனவரியில் ரிலீஸாகும் எனக் கூறப்படுகிறது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow